விடலை ரசிகர்களே மாஸ் ; நடிகை ஸ்ரீ டார்க்கெட்
தமிழுக்கு புது வரவா
இல்லை. பக்கா தமிழ் பொண்ணு நான். பிறந்த ஊர் காரைக்குடி. தமிழில் ஏற்கெனவே சில படங்களில் நடித்துள்ளேன். படித்தது அழகப்பா பல்கலையில் பி.எஸ்சி., பரதநாட்டியம். தற்போது சென்னையில் உள்ளேன்.
நடிக்கும் படங்கள்
"சரித்திர பதிவேடு", "போடுறது தங்கம் ஓட்டுறது சிங்கம்" மற்றும் ஒரு பெயரிடப்படாத தமிழ் சினிமாக்களில் நடித்து வருகிறேன்.
நடிகையாவதற்கு முன்
மாடலிங் எனக்கு சிறு வயது முதல் பிடிக்கும். கல்லுாரி முடித்த பின் சில ஆண்டுகள் மாடலிங் செய்தேன். "ரேம்ப்ஷோ"விலும் ஒரு ரவுண்ட் வந்தேன். முன்னணி விளம்பர நிறுவனங்களிலும் நடித்துள்ளேன்.
மாடலிங் டூ சினிமா எப்படி
பல மாடலிங்குகள் ஒரு கட்டத்திற்கு மேல் சினிமாவிற்கு வந்து விட்டனர். நானும் அதுபோல் தான். தானாக வாய்ப்பு கிடைத்தது.
சினிமாவிற்காக உங்களை தயார்படுத்தியது எப்படி
நான் இதுவரை நடித்த படங்களில் பெரிய ஹீரோக்கள் இல்லை. அதனால் அச்சமின்றி நடித்தேன். கண்ணாடி பார்த்து வசனம் பேசி என்னை நானே மெருகேற்றிக்கொள்கிறேன்.
திரையில் ஜொலிக்க திறமை மட்டும் போதுமா
இன்றைய சூழ்நிலையில் திறமை மட்டும் இருந்தால் சினிமா ரேஸில் முந்த முடியாது. அத்துடன் நேரமும் முக்கியம்.
அழகு அவசியமில்லையா
அழகு என்பதை தாண்டி கதைக்கு ஏற்ற பல கேரக்டர்கள் பேசப்பட்டு வருகின்றன. ரொம்ப ரொம்ப அழகான நடிகைகளுக்கு ஏதார்த்தமான கேரக்டர்கள் பெரும் சவாலாகவே இருக்கும்.
சவாலான விஷயம்
தமிழ் பெண்ணாக பிறந்தது தான். என்ன தான் திறமை இருந்தாலும் தமிழ் சினிமாவில் தமிழ் பெண்கள் சாதிப்பது தான் கஷ்டம்.
உங்கள் சினிமா பயண இலக்கு
விடலை ரசிகர்களின் மனங்களை கொள்ளையடிப்பதும், சமூகத்திற்கு தேவையான கதைகளில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடிப்பதும் தான்.
கிளாமர் காட்சிகள் பற்றி
ஆடை குறைப்பு என்பதை கிளாமர் என சொல்லிவிட முடியாது. முகங்களில் "நான்வெஜ் எக்ஸ்பிரஷன்" கூடாது. படத்திற்கு தேவை என்றால் எல்லைக்கு உட்பட்ட கிளாமர் ஓ.கே., தான்.
பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி
வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட
சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!
கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்
மாடர்ன் வில்லி மகாலட்சுமி
மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்
எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்
எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்
ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன்
சிலருக்கு வாய்ப்புகள் தேடி வரும், சிலருக்கு தேடலுக்கு பின் கிடைக்கும். இதில் ஜார்ஜ் விஜய் நெல்சன் முதல்ரகம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தனி டிராக்கில் நடக்க ஆரம்பித்தவரை மிமிக்ரி
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.