அந்தோணி பாட்டு... கிராமத்து மெட்டு
கிராமிய கலைஞனாக இருந்து கச்சேரிகளில் பாடகராகி, சொந்தமாக பாடல்களை எழுதி பாடியவர். சினிமாவில் "திண்டுக்கல் சாரதியில்" அறிமுகமாகி பட்டித்தொட்டி எங்கும் கலக்கும் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்ற பன்முகத்தன்மை பெற்ற அந்தோணி தாசன் நம்முடன் பகிர்ந்தது...
அந்தோணி பெயருடன் நானே சேர்த்து வைத்துக்கொண்டது தாசன். சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம். தஞ்சாவூருக்கு பெற்றோர் குடியேறியதால் தஞ்சை அடையாளமாக மாறியது. தந்தை நாதஸ்வர கலைஞர் என்பதால், அவரிடம் நாதஸ்வரம் வாசிப்பதை கற்றுக்கொண்டேன்.
பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி, 10 வயது முதல் கல்யாணம், காது குத்து விழாக்களில் தாளம் வாசிக்க சென்றதில் கலைப்பயணம் துவங்கியது. உருமி, பறை உள்பட பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்க கற்றேன்.
கரகாட்டம் கற்றேன். சொந்தமாக பாடல்கள் எழுதி பாடினேன். கச்சேரிகளில் பாடத் துவங்கிய போது சினிமா வாய்ப்புகள் கிடைத்தது. சூது கவ்வும், மேயாத மான், தானா சேர்ந்த கூட்டம் உள்பட பல்வேறு படங்களில் பாடியுள்ளேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, ஹிந்தி, ஆங்கிலத்தில் பாடல் பாடி வருகிறேன்.
மற்ற மொழி பாடல்களை பாடும் போது தமிழ் மொழியில் பாடல் வரிகளை கேட்டு எழுதி பாடுவதாலும், பிழை இருந்தால் திருத்திக்கொள்வதால் மொழி தெரியாமல் இருந்தும் பிற மொழி பாடல்களை பாட முடிகிறது.
இசையமைப்பாளர்கள் எந்த மாதிரி பாடல் என இசையாக காட்டும் போது அப்பாடலுக்கு ஏற்றது போல பாடுகிறேன். இசையை கேட்டறிந்த கேள்வி ஞானத்தில் கற்றுக்கொண்டு தற்போது வைரி, எம்.ஜி.ஆர்., மகன், குய்கோ, அம்பு நாடு ஒம்பது குப்பம் உட்பட 5 படங்களுக்கு இசையமைத்துள்ளேன்.
எல்லா இசைக்கருவிகளையும் வாசிக்க முடியாத பட்சத்தில் மற்றவர்கள் உதவியை நாடுவேன். இசையமைக்கும் போது ரசிகனாக வேலை செய்வதால் சிறப்பாக பணி செய்ய முடிகிறது.
சொந்தமாக "அந்தோணியின் பாட்டு" என்ற "இண்டிபெண்டன்ட் பேண்ட்" வைத்து நடத்தி வருகிறேன். முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், இளையராஜா வாழ்க்கை வரலாற்றை பாடலாக பாடியது மறக்க முடியாத அனுபவம்.
திறமையான கிராமியக் கலைஞர்களை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த வழிகாட்டுதல்கள் இல்லை. சமூக வலைதளங்கள் கலைஞர்களுக்கு வழிகாட்டுதலை அளிக்க வேண்டும். திறமையானவர்களுக்கு பொருளாதார உதவி அளித்து, பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
கல்வி, தொழில் நிறுவனங்களின் நிகழ்ச்சிகள், திருவிழா, மக்களுக்கான நிகழ்ச்சிகள் உட்பட அனைத்து விழாக்களிலும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கி, அவர்களின் வாழ்க்கைக்கு உதவுவபதே லட்சியம் என்றார்.
பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி
வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட
சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!
கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்
மாடர்ன் வில்லி மகாலட்சுமி
மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்
எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்
எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்
ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன்
சிலருக்கு வாய்ப்புகள் தேடி வரும், சிலருக்கு தேடலுக்கு பின் கிடைக்கும். இதில் ஜார்ஜ் விஜய் நெல்சன் முதல்ரகம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தனி டிராக்கில் நடக்க ஆரம்பித்தவரை மிமிக்ரி
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.