குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி
தமிழ் திரைப்படம், தொலைக்காட்சி துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று ‛பூவே பூச்சூடவா, யாரடி நீ மோகினி, தாமரை" போன்ற டிவி தொடர்களில் நாயகியாக வலம் வருபவர் நடிகை தனலெட்சுமி. அசத்தும் பேரழகால் வசீகரிக்கும் இவர், தனது அயராத உழைப்பால் முன்னணி நாயகியாக உயர்ந்துள்ளார்.
இவரது பயணம் பற்றி கூறியதாவது...
சொந்த ஊர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி. தந்தை கண்ணன், தாயார் மீனாட்சி, சகோதரி சாயுஜியா. சைக்காலஜி படித்திருக்கிறேன்.
பிரியமுடன், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, தை பொறந்தாச்சு, கிழக்கும் மேற்கும், சத்திரபதி, ஜாம்பவான், இன்பா, சிங்கக்குட்டி, முதல் இடம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். பழம்பெரும் இயக்குனர்களான ஏ.சி. திருலோகசந்தர், எஸ்.பி. முத்துராமன், கே.பாலச்சந்தர் போன்றோர் படங்களில் பணியாற்றியதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன். இது என் நடிப்புத் திறனை மேலும் செம்மைப்படுத்தியது.
மங்கை, அப்பா அம்மா, சொந்தம், வாழ்க்கை, நம்பிக்கை, அண்ணாமலை, வீட்டுக்கு வீடு லாட்டி, மிஸ்டர் அண்ட் மிசஸ் (கிரேஸி மோகன்), காவ்யா அஞ் சலி தொடர்களிலும் நடித்துள்ளேன்.
‛ரெட்டை ரோஜா, ரஞ்சிதமே, பொன்னி சி/ஓ ராணி, கார்த்திகை தீபம்" உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருகிறேன். இவை ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன. வெப் சீரிஸ்களில் இன்னும் நிறைய நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். திரைப்பட வாய்ப்பு வந்தால் அஜித்குமார், நயன்தாராவுடன் நடிக்க ஆசை. சினிமாவில் சாதிக்க விரும்பும் இளம்பெண்களுக்கு சொல்ல விரும்புவது இது தான்...
எப்போதும் மனதையும், உடலையும் "பிட்"ஆக வைத்துக் கொள்ள வேண்டும். நடிப்பு தவிர நடனம், பாடுவது போன்ற பிற திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி
வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட
சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!
கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்
மாடர்ன் வில்லி மகாலட்சுமி
மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்
எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்
எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்
ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன்
சிலருக்கு வாய்ப்புகள் தேடி வரும், சிலருக்கு தேடலுக்கு பின் கிடைக்கும். இதில் ஜார்ஜ் விஜய் நெல்சன் முதல்ரகம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தனி டிராக்கில் நடக்க ஆரம்பித்தவரை மிமிக்ரி
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.