பிளாஷ்பேக் : எம்ஜிஆர் கைவிட்ட உத்தம புத்திரன்
இதே படத்தை சற்று மேம்படுத்தி திரைக்கதை, வசனம் எழுதினார் ஸ்ரீதர். அதே பெயரில் இந்தப் படம் 18 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடியது. சிவாஜி இரட்டை வேடங்களில் நடித்தார். பத்மினி, ராகினி ஹீரோயின்களாக நடித்தார்கள். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடக்கும்போது இதே படம் எம்ஜிஆர் நடிக்க இன்னொரு கம்பெனி தயாரிக்க ஏற்பாடு செய்து வந்தது. அப்போது பிரபலமாக இருந்த ராம்நாத் இயக்குவதாக முடிவாகி இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர், எம்ஜிஆரோடு மோத வேண்டாம் இந்த ப்ராஜக்டை டிராப் செய்து விடலாம் என்று தனது பங்குதாரர்களிடம் கூறினார். ஆனால் அவர்கள் அவர் படமும் வரட்டும், சிவாஜி படமும் வரட்டும் மக்களுக்கு எந்த படம் பிடிக்கிறதோ பார்த்துக் கொள்ளட்டும் என்று கூறிவிட்டனர்
ஒரே நாளில் சிவாஜி இரட்டை வேடங்களில் நடிக்கும் உத்தமபுத்திரன் என்றும் எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடிக்கும் உத்தம புத்திரன் என்றும் இரண்டு தனித்தனி விளம்பரங்கள் ஒரே பத்திரிகையில் வெளிவந்தது. ஆனால் இந்த போட்டியில் இருந்து எம்ஜிஆர் விலகிக் கொண்டார். படத்தை பிரகாஷ்ராவ் இயக்கினார்.
பின்னாளில் இதுகுறித்து பேசிய எம்ஜிஆர். “என்னை விட சிவாஜி அந்த படத்திற்கு பொருத்தமானவர். நான் நடித்து அற்புதமான அந்த கதையை வீணாக்க விரும்பவில்லை. அதோடு என்னை தயாரிப்பாளர்கள் அணுகியபோதே இந்த கதைக்கு சிவாஜிதான் பொருத்தமாக இருப்பார் அவரை போய் பாருங்கள் என்றுதான் சொன்னேன். என்று கூறினார்.
நான் நடந்தால், பேசினால் சாதனைதான்: சிம்பொனி நிகழ்ச்சியில் இளையராஜா
இசையமைப்பாளர் இளையராஜாவின் வேலியண்ட் சிம்பொனி இசை நிகழ்ச்சி சென்னை நேரு வெளி விளையாட்டு அரங்கில் நேற்று இரவு நடந்தது. இதில் இளையராஜா தம்பி கங்கைஅமரன், மகன்கள் கார்த்திக்ராஜா,
அடுத்தடுத்து போட்டோஷுட், கலக்கல் புகைப்படங்களுடன் காஜல் அகர்வால்
ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் காஜல் அகர்வால். துறுதுறுவென நடிப்பார், நன்றாக நடனமாடுவார், கிளாமர் காட்டுவதிலும் தயங்க மாட்டார். சில
அஜித் தாயார் உடல் தகனம்; முதல்வர் விஜய், திரிஷா இரவில் நேரில் ஆறுதல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தாயார் மோகினி (84 வயது) நேற்று அதிகாலையில் இயற்கை எய்தினார். துபாயில் இருந்த அஜித் நேற்று இரவு சென்னை திரும்பினார்.தமிழக முதல்வர் ஜோசப்
அவமானப்படுத்தியதாக பெண் தயாரிப்பாளர் புகார் : தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இருவர் மீது வழக்கு பதிவு
சென்னை : பெண் தயாரிப்பாளரை பலர் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வைத்து அவமானப்படுத்தியதாக கொடுத்த புகாரின் பேரில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இருவர் மீது வழக்குப்பதிவு
நடிகர் சத்யேந்திரா உடல் தகனம்
சென்னை : ஹாலிவுட், ஜெர்மன் உள்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்த சத்யேந்திரா இறந்த நிலையில், இன்று(மே 30) அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த நடிகர் சத்யேந்திரா, 65,
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.