கில்லி அம்மான்னு சொல்றது பிடிக்குமா? மனம் திறக்கிறார் ஜானகி சபேஷ்
"தி ஜங்கிள் ஸ்டோரிடெல்லிங் பெஸ்டிவல்", பாட்டியின் ரசம்" என்ற இரு கதைப்புத்தகங்கள் மூலம், சிறார் எழுத்தாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.
சமீபத்தில், திருப்பூர் வந்த அவரிடம் பேசியதிலிருந்து...
சினிமா என்ட்ரீ எப்போது?
ராஜிவ் மேனனின் விளம்பரம் தான் முதல் என்ட்ரீ. மின்சார கனவு பட வாய்ப்பு கிடைச்சது. அதன்மூலம், "ஜீன்ஸ்" பட வாய்ப்பு. அனேகமாக அந்த படத்துல இருந்துதான் தமிழ் சினிமாவுல இளமையான, காமெடியான அம்மா கேரக்டர்கள் ஆரம்பிச்சதுன்னு சொல்லலாம்.
கதைசொல்லி குறித்து...
ஒருமுறை, பெங்களூருவை சேர்ந்த "கதாலாயா" நிறுவனர் கீதா ராமானுஜத்தின், "ஸ்டோரி டெல்லிங் ஒர்க்ஷாப்"ல கலந்துகிட்டேன். அதுதான் என்னோட திருப்புமுனை. கொல்கத்தா, டெல்லி, மும்பை, சென்னை என முக்கிய நகரங்களில் வசிக்கிறேன். இந்த நகரங்கள் எனக்கு பல முக்கியமான கதைகளை கத்துக்கொடுத்திருக்கு. இந்த அனுபவங்களை கதைகளாக குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் ஆர்வமும் அதிகரித்துள்ளது.
எழுத்தார்வம் எப்படி வந்தது?
ஒருமுறை நெருப்புக்கோழி பற்றி கதை சொல்லுங்களேன்னு ஒரு சிறுவன் கேட்டான். கூகுளில் கூட இல்லை. நானே உருவாக்கியதுதான், "தி ஜங்கிள் ஸ்டோரி டெல்லிங் பெஸ்டிவல்" புத்தகம். தமிழ் உட்பட ஒன்பது மொழிகள்ல மொழிபெயர்த்து வெளியிட்டிருக்காங்க துளிகா பதிப்பகம். பாட்டியின் ரசம்" ஒரு இளம் பெண் தன் பாட்டியின் மறைவால் காணாமல் போன ஒரு வகை ரசத்தின் செய்முறையை தேடுவதை சுற்றியே கதை சுழல்கிறது.
உங்களுக்கான அடையாளம்?
கில்லி அம்மா" பாருனு சொல்வதைவிட, குழந்தைகள் என் கதைகள் மூலமா என்னை அடையாளம் காண்பது ரொம்ப பிடிச்சிருக்கு. ஜனங்களோடும், குழந்தைகள் சமூகத்தோடும் யாதார்த்த பழக முடிகிறது. அவர்களின் அன்புக்கு இணையேயில்லை. வாய்ப்பு வந்தால் நடிப்பையும் தொடர்வேன்.
எதுவாக இருந்தாலும் "ரவுண்டு" கட்டி அடிக்கிறீங்களே?
பேமிலி சப்போர்ட் முக்கியம். என் கதைகளில் வர்றபாட்டுக்கு, என் கணவரும், மகளும்தான், "ட்யூன்" போட்டாங்க. மாமியாருக்கு, 94 வயது. அவங்க அனுபவங்களையும் கேட்டு கதை எழுதுவேன். தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கும் வொர்ஷாப்னு ஓடிட்டே இருக்கேன், அவங்க என்கரேஜ்மென்ட் முக்கிய காரணம்.
உங்களின் கனவுநிறைவேறியதா?
வாழ்க்கை கொடுக்கும் வாய்ப்புகளை முழு மனதோடு செய்கிறேன். ரிசல்ட்டை நினைப்பதில்லை. ஆனாலும், பாட்டியின் ரசம்" புத்தகம், நீட் புக் லிட்ரேச்சுரல் புக்" விருது, பி.கே., கனோரியா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. கதைசொல்லிக்காக, முதல்முறையாக சேலம் பாவை குரூப் இன்ஸ்டிடியூசன், சிறார் கதை சிற்பி" விருது வாங்கியது பெருமிதமாக உள்ளது.
2K கிட்ஸ் அம்மாவுக்கு அட்வைஸ்?
காலம் மாறிட்டே இருக்கும். டீன் ஏஜ்ல நான் என் பொண்ணுகிட்ட சொன்னது, நீ எங்கிட்டக் கத்துக்க; நான் உங்கிட்ட இருந்து கத்துக்கறேன்". இது எனக்கு கரெக்டா ஒர்க் அவுட் ஆச்சு.
பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி
வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட
சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!
கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்
மாடர்ன் வில்லி மகாலட்சுமி
மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்
எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்
எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்
ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன்
சிலருக்கு வாய்ப்புகள் தேடி வரும், சிலருக்கு தேடலுக்கு பின் கிடைக்கும். இதில் ஜார்ஜ் விஜய் நெல்சன் முதல்ரகம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தனி டிராக்கில் நடக்க ஆரம்பித்தவரை மிமிக்ரி
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.