முல்லையாக நடிக்க பயம்: லாவண்யா சிறப்பு பேட்டி
அவர் கூறியது:
நான் திருப்பூர் பொண்ணு. அம்மா புடவை, மளிகை பிசினஸ் செய்கிறார். அப்பா கொரியர் சர்வீஸ் வைத்துள்ளார். கூட பிறந்தவங்க ஒரு அக்கா, தம்பி. பள்ளி படிப்பு எல்லாம் திருப்பூர்ல தான். கோவையில் பி.ஏ., பொருளாதாரம் முடித்தேன்.
எங்கள் ஊர் பகுதியில் கல்லுாரி படிப்பு முடிந்தவுடன் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பர். ஆனால் நான் பள்ளியில் படிக்கும் போது இருந்தே வேலைக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்ற உறுதி கொண்டிருந்தேன். கல்லுாரியில் படிக்கும் போதே எனது மேற்படிப்பிற்காக பணம் சேமித்து வைக்க தொடங்கினேன். இதற்காக 40 பள்ளி மாணவர்களுக்கு "டியூஷன்" எடுத்தேன்.
அப்பணத்தை கொண்டு வங்கி வேலைக்கு படித்தேன். பின்னர் வங்கி வேலை கிடைத்தது. வங்கியில் கிளை மேளாளராக ஆக வேண்டும் என்பதே என் குறிக்கோள். ஆனால் இயந்திர வாழ்க்கையை தாண்டி ஏதாவது சாதிக்க வேண்டும் என தோன்றியது.
புடவை விற்பனை பிசினஸ் செய்து கொண்டிருந்தேன். அப்போது அவற்றை போட்டோ எடுக்க வேண்டியிருந்தது. அதற்கு நானே மாடலாக இருந்தேன். பின்னர் விளம்பர படங்கள், மாடலிங் என கிடைக்கும் நேரத்தில் செய்து கொண்டிருந்தேன். அதன் மூலம் மாடலிங்கினுள் வந்தேன்.
2018ல் "குயின் ஆப் மெட்ராஸ்" டைட்டில் வாங்கினேன். 2020 "மிஸ் தமிழ்நாட்டில்" 2வது ரன்னர் அப், மிஸ் சவுத் இந்தியாவில் "மிஸ் போட்டோஜெனிக்" டைட்டில்கள் பெற்றேன். "மிஸ் இந்தியா"விற்கும் தேர்வாகினேன் சில பிராஜெக்ட்கள் வந்ததால் அதனை தவறவிட்டேன்.
2 வெப் சீரிஸ், 3 படங்கள், 2 சீரியல்கள், தனியார் டிவி நிகழ்ச்சி, குறும்படங்கள் நடித்துள்ளேன். தற்போது பாண்டியன் ஸ்டோர்சில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
இக்கதாபாத்திரத்தில் முல்லையாக நடிக்க மிகவும் பயந்தேன். மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அவர்கள் வீட்டுப் பெண்ணாக மாறிவிட்டேன். நடிகர் சிவகார்த்திகேயனுடன் படம் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை.
வங்கி வேலையை விட்டு நடிப்பு துறைக்கு செல்ல வேண்டும் என்றபோது பெற்றோர் விருப்பம் கொள்ளவில்லை. என்னுடைய முடிவில் அழுத்தமாக இருந்தேன். பல போராட்டங்களுக்கு பின் நான் இத்துறைக்கு வந்தேன். காலப்போக்கில் அவர்கள் என்னை புரிந்துகொண்டனர். பெற்றோர்களே உங்கள் குழந்தை மீது நம்பிக்கை வையுங்கள். அவர்கள் செல்லும் பாதை சரியானதாக இருக்கும் என நம்புங்கள். நிச்சயம் உங்களை பெருமைபடுத்துவர்.
பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி
வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட
சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!
கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்
மாடர்ன் வில்லி மகாலட்சுமி
மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்
எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்
எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்
ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன்
சிலருக்கு வாய்ப்புகள் தேடி வரும், சிலருக்கு தேடலுக்கு பின் கிடைக்கும். இதில் ஜார்ஜ் விஜய் நெல்சன் முதல்ரகம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தனி டிராக்கில் நடக்க ஆரம்பித்தவரை மிமிக்ரி
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.