படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ்
அப்பா சென்னை, அம்மா கும்பகோணம். அப்பாவின் வேலை விஷயமாக சென்னையில் நாங்கள் குடியிருந்தாலும் பள்ளி படிப்பை கும்பகோணத்தில் முடித்தேன். கல்லுாரி படிப்புக்காக சென்னை வந்தேன். ஒரளவுக்கு நல்லா எழுதுவேன் என்பதால் சினிமா படங்களை எழுதி இயக்கும் ஆசை சிறிய வயதிலிருந்தே உண்டு. இயக்குனர் மிஷ்கினை பிடிக்கும். அவரிடம் உதவி இயக்குனராக சேர முயற்சித்து வந்தேன். அவரை சந்தித்ததை வைத்தே ஒரு கதை எடுத்து விடலாம். கொட்டும் மழையுடன் அவரது அலுவலகத்திற்கு சென்று கதவை தட்டினேன். அவரே கதவை திறந்தார். எளிமையாக இருந்தவர் உடனடியாக அலுவலக உதவியாளரிடம் மழையில் நனைந்த என் தலையை துடைக்க துண்டு கொடுக்க சொன்னதுடன் முதலில் சாப்பிட்டு விட்டு பேசுவோம் என்றார். பிறகு மறுநாளே வேலைக்கு வந்து விடும்படி கூறினார். அப்படி தான் அவரது ஓநாயும் ஆட்டுக்குட்டிகளும் படத்தில் உதவி இயக்குனரானேன். பிறகு 2017ல் "8 தோட்டாக்கள்" என்ற கிரைம் கலந்த திரில்லர் படத்தை முதல் முறையாக இயக்கினேன். அது ஓரளவுக்கு போனது. பிறகு "குருதி ஆட்டம்" பட வாய்ப்பு வந்தது.
3 பி.எச்.கே., நான் இயக்கிய 3வது படம். சொந்த வீடு வாங்க ஆசை எல்லோருக்குமே இருக்கும். நான் சிறுவனாக இருக்கும் போது நாங்கள் குடும்பத்துடன் ஒவ்வொரு வீடாக வாடகைக்கு மாறியிருக்கிறோம். அந்த அனுபவம் பலருக்கும் இருக்கும். அதை எதார்த்தம் மாறாமல் நடுத்தர குடும்பம் எப்படி சொந்த வீடு வாங்க ஆசைபடுகிறது, எதிர்கொள்ளக்கூடிய பிரச்னைகளை சுவாரஸ்யத்துடன் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 3 பி.எச்.கே.,யை இயக்கினேன். நான் எதிர்பார்த்த மாதிரியே படம் மக்களிடம் நல்ல முறையில் "ரீச்" ஆகியிருக்கிறது. தங்கள் வாழ்வில் நடந்த அனுபவத்தை படமாக தந்திருப்பதாக உணர்ச்சி பெருக்குடன் மக்கள் தெரிவிப்பது மகிழ்ச்சியை தருகிறது. எங்கள் குடும்பத்தினரும் படத்தை பார்த்து உணர்ச்சி வசப்பட்டனர். திரையிட்ட எல்லா தியேட்டர்களிலுமே படம் கொண்டாடப்படுகிறது.
நடிகர்கள் சரத்குமார், சித்தார்த், நடிகை தேவயானி போன்றவர்களை தேர்வு செய்து தகுந்த கேரக்டர்களில் நடிக்க வைத்ததையும் எல்லோரும் பாராட்டுகின்றனர். இவர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என எனக்கு தோன்றியது. ஆக் ஷன் ஸ்டாரான சரத்குமாரை மென்மையாக நடிக்க வைத்திருப்பதாக சினிமா பிரபலங்களே குறிப்பிட்டு சொல்வது சந்தோஷம்.
அடுத்த கதை தயாராகிறது. 3 பி.எச்.கே.,யை விட நன்றாக தர வேண்டும் என்ற பயமும் இருக்கிறது. நல்ல கதையம்சமுள்ள படங்களை கொடுத்தால் ரசிகர்கள் வரவேற்பர். அதை தான் 3 பி.எச்.கே., வெற்றி சொல்கிறது என்றார்.
பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி
வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட
சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!
கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்
மாடர்ன் வில்லி மகாலட்சுமி
மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்
எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்
எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்
ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன்
சிலருக்கு வாய்ப்புகள் தேடி வரும், சிலருக்கு தேடலுக்கு பின் கிடைக்கும். இதில் ஜார்ஜ் விஜய் நெல்சன் முதல்ரகம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தனி டிராக்கில் நடக்க ஆரம்பித்தவரை மிமிக்ரி
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.