மக்களை சந்தோஷப்படுத்தணும்: சந்தோஷத்தில் சாம்ஸ்
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவருடன் பேசியதிலிருந்து...
பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் திருச்சி தான். சுவாமிநாதன் என் உண்மையான பெயர். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்து தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைஸராக சேர்ந்தேன். சின்ன வயதில் எல்லோராலும் கவனிக்கப்பட வேண்டிய நபராக வேண்டும் என்ற ஆசை. மற்றவர்களை காட்டிலும் நான் சற்று கலகலப்பான ஆள். என் பேச்சும் அப்படி தான் இருக்கும். இதை கவனித்த நண்பர் ஜெயபிரகாஷ் எல்லோரையும் கலகலப்பாக இருக்க வைப்பதாக பேசும் நீ ஏன் சினிமாவில் நடிக்க கூடாது என்றார். மற்ற நண்பர்களுடன் இணைந்து சென்னைக்கு அனுப்பினார்.
சென்னைக்கு வந்த போது ஒவ்வொரு இயக்குனர் அலுவலகமாக ஏறி இறங்கினேன். அப்போது தான் நாடகங்களில் நடித்தால் என்ன என தோன்றியது. மறைந்த நகைச்சுவை வசனகர்த்தா கிரேஸிமோகன் நாடக குழுவில் இணைந்தேன். முதல் நாடகத்தில் என் குரல் மட்டும் ஒலித்தது. அது மேடையில் ஒலிக்க கேட்டு நண்பர்கள் ஊக்கமூட்டினர். படிப்படியாக நாடகங்களில் சிறிய ரோல்களில் நடிக்க துவங்கினேன். அத்துடன் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்பு தேடிக் கொண்டு இருந்தேன்.
இதற்கிடையில் திருமணம் நடந்தது. மனைவி ஆசிரியை. அவர் என்னை புரிந்து கொண்டு,""நான் குடும்பத்தை பார்த்து கொள்கிறேன். நீங்கள் கலையை பார்த்து கொள்ளுங்கள்,"" என தைரியம் கொடுத்தார். அஜித் நடித்த காதல் மன்னன் என் முதல் படம். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் மனங்கொத்தி பறவை, அறை எண் 305 கடவுள், கருப்பசாமி குத்தகைதாரர், சரவணன் இருக்க பயமேன் என தொடர்ந்து வாய்ப்புகள் கிட்டின. பயணம் படம் ஒரளவு பெயர் பெற்று தந்தது. கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் நகைகடை அதிபர் மகனாக நடிகர் வடிவேலுவிடம் நகையை பறிகொடுப்பது உள்ளிட்ட காட்சிகள் மக்களிடம் எனக்கு அடையாளத்தை பெற்று தந்தது.
இதுவரை 120 க்கும் மேற்பட்ட சினிமாக்களில் நடித்து விட்டேன். இடையில் 60க்கும் மேற்பட்ட விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறேன். எல்லா நகைச்சுவை நடிகர்களையும் எனக்கு பிடிக்கும். நாகேஷ் தான் எனக்கு துாண்டுகோல். பலரும் நான் மறைந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபு சாயலில் இருப்பதாக கூறுவது சந்தோஷம் தான். தற்போது ஒன்பது படங்களில் நடித்து வருகிறேன்.
தொடர்ந்து மக்கள் ரசிக்கும் நகைச்சுவை நாயகனாக நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. நல்ல மனிதர் என்ற பெயரை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்றார்.
பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி
வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட
சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!
கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்
மாடர்ன் வில்லி மகாலட்சுமி
மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்
எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்
எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்
ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன்
சிலருக்கு வாய்ப்புகள் தேடி வரும், சிலருக்கு தேடலுக்கு பின் கிடைக்கும். இதில் ஜார்ஜ் விஜய் நெல்சன் முதல்ரகம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தனி டிராக்கில் நடக்க ஆரம்பித்தவரை மிமிக்ரி
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.