40 வருடங்களை நிறைவு செய்யும் விக்ரம்
கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், ராஜசேகர் இயக்கத்தில், இளையராஜா இசையில், கமல்ஹாசன், சத்யராஜ், அம்பிகா, டிம்பிள் கபாடியா, லிஸி, ஜனகராஜ் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம்.
அந்தக் காலத்தில் படம் வந்த போது ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்ப்பது போன்று இருந்ததாக ரசிகர்கள் பாராட்டினார்கள். ஆனால், அந்தப் பாராட்டு மட்டும் படத்தின் வெற்றிக்குப் போதுமானதாக இல்லை.
இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த "அக்னிபுத்ரன்" என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சத்யராஜ் கும்பல் கடத்திவிடுகிறது. தேசத் துரோக வழக்கிற்காக கைது செய்யப்பட்ட மூன்று பேரை விடுவித்தால்தான் அந்த ஏவுகணையைக் கொடுப்போம் என்கிறார்கள். இந்திய உளவுப் பிரிவான "ரா"வின் அதிகாரி, அதைக் கண்டுபிடிக்க முன்னாள் அதிகாரியான கமல்ஹாசனை அழைக்கிறார். ஆனால், மீண்டும் பணிக்கு வர மறுக்கிறார் கமல்ஹாசன். இந்நிலையில் தேனிலவில் இருக்கும் போது கமல்ஹாசன் மனைவி அம்பிகா கொல்லப்பட, அழைப்பை ஏற்று பணிக்குச் செல்கிறார் கமல்ஹாசன்.
சலாமியா என்ற நாட்டில் ஏவுகணை இருக்கலாம் என கமல்ஹாசனும், கம்ப்யூட்டர் இஞ்சினியரான லிஸியும் புறப்படுகிறார்கள். அவர்கள் ஏவுகணையைக் கண்டுபிடித்தார்களா, கடத்தியவர்களை கைது செய்தார்களா என்பதுதான் படத்தின் கதை.
அழகான கமல்ஹாசனின் அதிரடி ஆக்ஷன், சிறிது நேரமே வந்தாலும் மனம் கவர்ந்த அம்பிகா, ஹிந்தியிலிருந்து வந்த டிம்பிள் கபாடியா, லிஸி, வித்தியாசமான வில்லன் வேடத்தில் சத்யராஜ், சலாமியா அரசர் அம்ஜத்கான், மொழி பெயர்ப்பாளர் ஜனகராஜ் என மற்ற கதாபாத்திரங்களும் சுவாரசியமாக அமைக்கப்பட்டவை. டிம்பிள், லிஸி இருவரும் அறிமுகமான தமிழ்ப் படம் இது.
இளையராஜா இசையில் இடம் பெற்ற, “வனிதாமணி வனமோகினி, மீண்டும் மீண்டும் வா, எஞ்சோடி மஞ்சக் குருவி, சிப்பிக்குள் ஒரு முத்து, விக்ரம் விக்ரம்” ஆகிய ஐந்து பாடல்களும் அந்தக் காலத்தில் அதிக கேசட்டுகள் விற்கக் காரணமாக இருந்த சூப்பர் ஹிட் பாடல்கள். குறிப்பாக "மீண்டும் மீண்டும் வா" பாடலில் டிம்பிள் கபாடியாவின் கிளாமரில் கிறங்கிப் போனார்கள் அந்தக் கால இளைஞர்கள்.
எழுத்தாளர் சுஜாதா வாரப் பத்திரிகை ஒன்றில் எழுதிய கதைதான் "விக்ரம்" படமாக உருவானது. பிற்காலத்தில் வரவேண்டிய ஒரு படத்தை சீக்கிரத்திலேயே கொடுத்துவிட்டார்கள் என கமல்ஹாசன் ரசிகர்கள் படத்தின் தோல்விக்குப் பிறகு கூறினார்கள்.
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.
அவமானப்படுத்தியதாக பெண் தயாரிப்பாளர் புகார் : தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இருவர் மீது வழக்கு பதிவு
சென்னை : பெண் தயாரிப்பாளரை பலர் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வைத்து அவமானப்படுத்தியதாக கொடுத்த புகாரின் பேரில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இருவர் மீது வழக்குப்பதிவு
நடிகர் சத்யேந்திரா உடல் தகனம்
சென்னை : ஹாலிவுட், ஜெர்மன் உள்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்த சத்யேந்திரா இறந்த நிலையில், இன்று(மே 30) அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த நடிகர் சத்யேந்திரா, 65,
டாக்சிக் குறித்து கியாரா அத்வானி பகிர்ந்த தகவல்
கேஜிஎப் 2 படத்திற்குப் பிறகு யஷ் நடித்துள்ள படம் டாக்சிக். கீது மோகன்தாஸ் இயக்க, நயன்தாரா, ஹியூமா குரேஷி, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஜனநாயகன் எப்போது ரிலீஸ் : வினோத் கொடுத்த பதில்
வினோத் இயக்கத்தில் முதல்வர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள கடைசி படம் ஜனநாயகன். கடந்த பொங்கல் தினத்தில் வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ரிலீஸ்
‛வேட்டுவம் படம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த சோபிதா துலிபாலா
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர் சோபிதா துலிபாலா. அதன் பிறகு நடிகர் நாக சைதன்யாவை திருமணம்
சசிக்குமார் திருப்பூர்
கதாநாயகனாக நடித்து வந்த சத்தியராஜ் இதில் மீண்டும் வில்லனாக நடித்தது