திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருபவர் நடிகை தேவயானி. 100 படங்களில் நடித்துள்ள இவர் முதன்முறையாக "கைக்குட்டை ராணி" என்ற குறும்படத்தை இயக்கி, தயாரித்துள்ளார். நிஹாரிகா வி.கே. மற்றும் நவீன் என் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்க, பி. லெனின் படத்தொகுப்பு செய்துள்ளார்.
சுமார் இருபது நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் குழந்தைகளின் உணர்வுகளை திரையில் சொல்கிறது. தாயை இழந்த, தந்தை வெளியூரில் பணிபுரியும் ஒரு பெண் குழந்தை எத்தகைய சிக்கல்களை சந்திக்கிறது என்பதை உணர்ச்சிப்பூர்வமாக இப்படம் வெளிப்படுத்தியுள்ளது. இந்த குறும்படம் 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது.
இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த தேவயானி, "எத்தனையோ படங்களில் நான் நடித்திருந்த போதிலும், முதன்முறையாக நான் இயக்கிய குறும்படம் சர்வதேச அளவில் விருது பெறுவது மகிழ்ச்சையையும், பெருமையையும் அளிக்கிறது. இதில் பங்காற்றியுள்ள மூத்த கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இதர சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் இப்படத்தை கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்" என்றார்.
அதோடு இந்த குறும்படத்தை பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு கொண்டு செல்லும் பணியை முன்னெடுத்துள்ளனர்.
தேவயானியின் முதல் இயக்கத்திற்கு கிடைத்த விருது
எழுத்து அளவு
அ-
அ+
Advertisement
கோலிவுட் செய்திகள்
உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை
தெலுங்கில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகை மிருணாள்
30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா
தமிழ் சினிமாவில் இயக்குனர் கே.பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு, நடிப்புத் திறமை வாய்ந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை சரிதா. குறிப்பாக, பெண்களை மையப்படுத்தி உருவான பல படங்களில்
முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்
சினிமா துறையிலிருந்து வந்து இன்று தமிழகத்தின் முதல்வராகி உள்ளார் நடிகர் விஜய். அவர் பொறுப்பேற்றது முதல் பல துறையை சேர்ந்த பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.