நடன இயக்குனர் ஜீவா, திரைப்பட இயக்குனர் யார் கண்ணன் ஆகியோரின் மகள் சாயதேவி. "கன்னிமாடம்" படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பிறகு சார், பரமசிவன் பாத்திமா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது அவர் நடித்துள்ள படம் "அலப்பறை". இதில் அவருக்கு ஜோடியாக "முருகா" அசோக்குமார் நடித்துள்ளார். சி.எஸ்.காளிதாசன் இயக்கியுள்ளார்.
பி.எல்.தேனப்பன், "யார்" கண்ணன், நமோ நாராயணன், அன்வர் அலிகான், கோதண்டம், தம்பி சிவன், ஹரிநாத், ரதியா ஹரி, ஆலந்தூர் பிரவீன் குமார், வேல்குமார் நடித்துள்ளனர். ஹரிகாந்த் ஒளிப்பதிவு செய்ய, அபி ஜோஜோ இசை அமைத்துள்ளார். (சபேஷ்) முரளி பின்னணி இசை அமைத்துள்ளார். சிஎஸ்கே சினிமா தயாரித்துள்ளது.
படம் குறித்து இயக்குனர் கூறும்போது "அரசியல் இல்லாமல் ஆன்மிகம் இல்லை, ஆன்மிகம் இல்லாமல் அரசியல் இல்லை. இரண்டும் கலந்து இருப்பதுதான் யதார்த்தம், இந்த கருத்தை அழகான காதலோடு, நல்ல திரைக்கதையோடு சொல்லும் படம். படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. மற்ற பணிகள் நடந்து வருகிறது. விரைவில் திரைக்கு கொண்டு வருகிறோம்" என்றார்.
சாயா தேவியின் அலப்பறை
எழுத்து அளவு
அ-
அ+
Advertisement
கோலிவுட் செய்திகள்
பிளாஷ்பேக்: பெண் விடுதலை பேசிய பி.விட்டலாச்சாரியா
இயக்குனர் விட்டலாச்சாரியா என்றாலே அவர் இயக்கிய மாயாஜால படங்கள் எல்லாம் நினைவுக்கு வரும். ஆனால் ஆரம்ப காலகட்டங்களில் அவர் பெரும் சமுதாயப் புரட்சி படங்களை இயக்கியவர். அதில் முக்கியமான
சகோதரர் இறந்த துக்கத்தை மறைத்துக்கொண்டு மறுநாளே காமெடி காட்சியில் நடித்த ஊர்வசி
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள படம் பரிமளா அண்ட் கோ. நீண்ட இடைவெளிக்குப்பிறகு இதில் ஜெயராமும் ஊர்வசியும் இணைந்து நடித்துள்ளார்கள்
சாமியாடும் ரசிகர்கள்: நடிகர் சூர்யா வேண்டுகோள்
ஆர். ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த கருப்பு படத்தில் கருப்பசாமி வரும் காட்சிகளில் சிலர் சாமி ஆடுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அப்போது வீடியோ எடுக்க கூடாது என
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.