காமெடி நடிகர் போண்டா மணி காலமானார்
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகர் போண்டா மணி, 1991ம் ஆண்டு வெளியான நடிகர் பாக்யராஜின் "பவுனு பவுனுதான்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து "சுந்தரா டிராவல்ஸ்", "மருதமலை", "வின்னர்", "வேலாயுதம்", "ஜில்லா" உள்ளிட்ட 150க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
சென்னை பொழிச்சலூரில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தான் இன்று இரவு 10 மணிக்கு அவர் தனது வீட்டில் திடீரென்று மயங்கி உள்ளார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மறைந்த நடிகர் போண்டா மணியின் உடல் இன்று (டிச.,24) மாலை 4 மணியளவில், அவரது இல்லத்தில் இருந்து இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, பல்லாவரம் பொழிச்சலூரில் இருந்து, ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, மாலை 5 மணியளவில் குரோம்பேட்டை மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
பெத்தி படத்திலிருந்து வெளியேற நினைத்தேன் ; சிவராஜ்குமார் நெகிழ்ச்சி
கன்னட முன்னணி நடிகராக சிவராஜ்குமார், ஜெயிலர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த
பிளாஸ்ட் : 25 கோடி வசூல் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில், அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் மே 28ம் தேதி வெளியான படம் பிளாஸ்ட். இப்படத்திற்கு ரசிகர்களிடமும்,
கருப்பு : வெளியீட்டிற்கு முன்பு டெபிசிட், பின்பு பிராபிட்
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் அறிவிக்கப்பட்ட மே 14ம் தேதிக்குப் பதிலாக ஒரு நாள் தாமதமாக மே 15ம் தேதி வெளியான படம் கருப்பு. படத்தின் வெளியீட்டிற்காக
ஜூன் 25ல் திரைக்கு வரும் ஆர்யாவின் ‛அனந்தன் காடு
ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் லூசிபர் பட கதையாசிரியர் எழுதியுள்ள கதையில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள படம் அனந்தன் காடு. இதில் ரெஜினா, நிகிலா விமல், இந்திரன்ஸ், சுனில் ஆகியோர்
பிளாஷ்பேக்: இயக்குநர் ஏ எஸ் ஏ சாமிக்கு வண்ணத்திரை வாய்ப்பை வழங்கிய வானொலி நாடகம்
1944ம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று, திருச்சி வானொலி நிலையம் ஒரு நாடகத்தை ஒலிபரப்பியது. கலையுலகின் அன்றைய உச்ச நட்சத்திரமான எம் கே தியாகராஜ பாகவதர் அந்த ரேடியோ நாடகத்தில் முதன் முதலாக நடிக்கப்
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.