பிளாஷ்பேக்: பத்திரிகையாளர்கள் உருவாக்கிய படம்
எழுத்து அளவு
அ-
அ+
வைணவத் துறவியும் சமூக சீர்திருத்தவாதியுமான ராமானுஜரைப் பற்றி ஒரு திரைப்படமோ தொடரோ உருவாக்கப்பட வேண்டும் என்பது திராவிடர் கழக நிறுவனர் ஈ.வே. ராமசாமியின் பெரிய கனவாக இருந்தது. "அக்ரகாரத்து அதிசய மனிதர்" என்று ராமானுஜரை புகழ்ந்தவர் அவர்.
அவரின் ஆசைக்கு இணங்க சுதந்திரப் போராட்ட வீரரும் சமூக சீர்திருத்தவாதியுமான வா.ராமசாமி ஐயங்கார், ராமானுஜரைப் பற்றி ஒரு திரைப்படத்தை உருவாக்கினார். அத்திரைப்படத்திற்கான பாடல்களை திராவிட இயக்கத்தின் கவிஞரான பாரதிதாசன் எழுதியிருந்தார். அப்போதே, பாரதிதாசன் ஒரு இந்து சாமியார் படத்திற்குப் பாடல்கள் எழுதுகிறார் என்று அவர் மீது கடும் விமர்சனம் இருந்தது.
ஏ.நாராயணன் இயக்கத்திலும் மீனாட்சி நாராயணனின் ஒளிப்பதிவிலும் வெளிவந்த இத்திரைப்படத்தில் சங்கு சுப்பிரமணியம், ந.ராமரத்னம் போன்ற பத்திரைக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பலரும் நடித்து அவர்களின் கூட்டு முயற்சியால் வெளியானது.
படத்தின் கதை வசனம் போன்றவை நன்றாக இருந்தாலும் நடித்தவர்களின் தோற்றம் கேரக்டர்களுக்கு பொருந்தவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. குறிப்பாக ராமானுஜர் வேடத்தில் நடித்த சங்கு சுப்பிரமணியம் கடுமையாக விமர்சிக்கப்பட்டார், இதனால் படம் தோல்வியடைந்தது. 1939ம் ஆண்டு வெளியான இந்த படமே ராமானுஜர் வாழ்க்கை பற்றிய முதல் படம் என்று கூறப்படுகிறது.
Advertisement
கோலிவுட் செய்திகள்
பிளாஷ்பேக்: பெண் விடுதலை பேசிய பி.விட்டலாச்சாரியா
இயக்குனர் விட்டலாச்சாரியா என்றாலே அவர் இயக்கிய மாயாஜால படங்கள் எல்லாம் நினைவுக்கு வரும். ஆனால் ஆரம்ப காலகட்டங்களில் அவர் பெரும் சமுதாயப் புரட்சி படங்களை இயக்கியவர். அதில் முக்கியமான
சகோதரர் இறந்த துக்கத்தை மறைத்துக்கொண்டு மறுநாளே காமெடி காட்சியில் நடித்த ஊர்வசி
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள படம் பரிமளா அண்ட் கோ. நீண்ட இடைவெளிக்குப்பிறகு இதில் ஜெயராமும் ஊர்வசியும் இணைந்து நடித்துள்ளார்கள்
சாமியாடும் ரசிகர்கள்: நடிகர் சூர்யா வேண்டுகோள்
ஆர். ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த கருப்பு படத்தில் கருப்பசாமி வரும் காட்சிகளில் சிலர் சாமி ஆடுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அப்போது வீடியோ எடுக்க கூடாது என
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.