பிளாஷ்பேக்: குஷ்புவை நிராகரித்த பார்த்திபன்
பார்த்திபன், இயக்கி, நடித்த முதல் படம் "புதிய பாதை". புதிய பாதை கதையை எழுதிவிட்டு தயாரிப்பாளர் தேடி அலைந்தபோது சுந்தரம் என்ற பத்திரிகையாளர்தான் படத்தை தயாரிக்க முன்வந்தார். 40 லட்சத்துக்கு பட்ஜெட் போடப்பட்டு 38 லட்சத்தில் எடுக்கப்பட்ட படம்.
இந்த படத்தில் நாயகனாக நடிக்க ரஜினியைத்தான் நினைத்திருந்தார் பார்த்திபன். ஆனால் அப்போது ரஜினியின் சம்பளமே 50 லட்சத்திற்கு மேல் என்பதால் அந்த திட்டத்தை கைவிட்டு தானே நடித்தார். குஷ்புதான் நாயகியாக நடிக்க வேண்டும் என்று விரும்பினார். அவரது வீட்டுக்கு சென்று கதை சொன்னார். கதை குஷ்புவிற்கு மிகவும் பிடித்து நடிக்கவும் ஒப்புக் கொண்டார். பிறகு படத்தின் சில டயலாக்குகளை கொடுத்து பேசச் சொன்னார். ஆனால் அவரது வசன உச்சரிப்பில் இந்தி வாசனை இருந்தது. அதோடு அவரது தோற்றமும் வடஇந்திய பெண்ணாக இருந்ததால் அவரை நிராகரித்தார்.
பிறகுதான் சீதாவை தேர்வு செய்தார். சீதாவை கண்டதுமே காதல் கொண்டார். இதனால் படத்தில் தனது கேரக்டர் பெயரையே சீத்தாராமன் என்று மாற்றினார். பின்னர் காதலித்து திருமணமும் செய்தார்.
ரிலீஸூக்கு தயாராகும் சர்வர் சுந்தரம்?
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டில் ரிலீஸூக்கு தயாரான படம் சர்வர் சுந்தரம். அந்தசமயம் இந்த படத்தின் மீது பல கடன்கள் இருந்ததால் ரிலீஸ் ஆகவில்லை. கடனை
ஹிரித்திக் ரோஷனிடம் வந்து நிற்கும் ஜெயிலர் 2
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ் குமார், மோகன்லால் ஆகியோர் நடிக்கின்றனர்.
மீண்டும் இணைகிறதா 24 பட கூட்டணி?
கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனம் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வருகின்றனர். தமிழிலும் விஜயின் ஜனநாயகன் படத்தின் மூலமாக அறிமுகமாகிறது கே.வி.என் நிறுவனம். ஜனநாயகன்
தயாரிப்பாளராக இயக்குனர் வினோத்
தமிழில் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கியவர் வினோத். தற்போது முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தை இயக்கியுள்ளார். தணிக்கை
கருப்பு வசூல் : விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்கு அடிக்கும் யோகம்
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான படம் கருப்பு. தற்போது மூன்றாவது வாரத்திலும் பல தியேட்டர்களில் ஓடிக்
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.