பிளாஷ்பேக்: உதவி இயக்குனராக பணியாற்றிய ரஜினிகாந்த்
இந்தப் படத்திற்கு ரஜினிகாந்த் 25 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருந்தார். படத்தின் பாடல் காட்சிகள் மைசூரில் உள்ள பிருந்தாவன் கார்டனில் நடந்து வந்தது. ரஜினி, கவுதமி பாடிய பாடலை படமாக்கிய பிறகு இரண்டாவது நாயகனான பிரபு சீதா ஆடிய பாடல் படமாக்கப்பட்டது.
இந்த பாடல் காட்சி படமாகும் போது ரஜினிகாந்த் தனது அறையிலேயே இருக்க வேண்டிய நிலை வந்தது. அப்போது எஸ்பி முத்துராமன் "நீங்கள் வேண்டுமானால் சென்னை சென்று விட்டு வாருங்கள். அதற்குள் இந்த பாடலை முடித்து விடுகிறேன்" என்று சொன்னார். அதற்கு ரஜினி "நான் இந்த படத்திற்கு 25 நாட்கள் தான் கால்ஷீட் கொடுத்திருக்கிறேன். நீங்கள் எனது இரண்டு நாட்களை வீணாக்க வேண்டாம். யோசித்து முடிவெடுங்கள்" என்று கூறியுள்ளார்.
அதற்கு எஸ்பி முத்துராமன் "பரவாயில்லை நான் சொன்ன தேதிக்குள் படத்தை முடித்து விடுவேன் நீங்கள் போய் வாருங்கள்" என்றார்.
மறுநாள் சீதா, பிரபு ஆடிய பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது ரஜினிகாந்த் அங்கே வந்தார். "சம்பளம் வாங்கி விட்டு சும்மா அறையில் இருப்பதை விரும்பவில்லை. அதனால் இன்றும் நாளையும் எனக்கு ஏதாவது ஒரு வேலை கொடுங்கள் நான் செய்கிறேன்" என்று ரஜினி கூறினார்.
இதை பார்த்து ஆச்சரியமடைந்த எஸ்.பி.முத்துராமன் "உங்களுக்கு என்ன வேலை பிடிக்கிறதோ அதை செய்யலாம்" என்றார். "நான் உங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றுகிறேன்" என்று கூறிவிட்டு ரஜினி அந்த இரண்டு நாட்களும் பிரபு ஆடியோ பாடல் காட்சிக்கு உதவி இயக்குனராக பணியாற்றினார். அந்தப் பாடல் "வா வா வஞ்சி இளமானே..."
ராணுவ வீரராக சசிகுமார் நடிக்கும் பீரியட் டிராமா படப்பிடிப்பு நிறைவு
புதுமுகங்கள் நடிப்பில், தரணி ராசேந்திரன் இயக்கத்தில் வெளியாக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படம் யாத்திசை. இவர் அடுத்து இயக்கும் படத்தில், சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில்
பாலா படத்தில் விஜய்சேதுபதி: கதை மாரி செல்வராஜ்?
அருண்விஜய் நடித்த வணங்கான் படத்துக்கு அடுத்த படத்தை இயக்காமல் அமைதியாக இருக்கிறார் பாலா. ஒரு தொழிலதிபர் மகனை கொண்டு படம் இயக்குகிறார் என கூறப்பட்டது. அது நடக்கவில்லை. இப்போது
மாளிகைப்புரம் இயக்குனரின் அடுத்த படைப்பு: வைபவ், மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்
மலையாளத்தில் உன்னிமுகுந்தன் நடிப்பில், விஷ்ணு சசிசங்கர் இயக்கத்தில் சபரிமலை ஐயப்பன் மகிமை சொல்லும் படமாக வந்து வெற்றி பெற்றது மாளிகைப்புரம். இப்போது அதே இயக்குனர்
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பாக்யஸ்ரீ போர்ஸ்
2025ல் வெளிவந்த துல்கர் சல்மான் நடித்த காந்தா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பாக்யஸ்ரீ போர்ஸ். அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில், தாய் கிழவி இயக்குனர் சிவக்குமார் முருகேசன்
எல்லம்மா தெய்வ வழிபாடு : தேவிஸ்ரீபிரசாத் நெகிழ்ச்சி
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவிஸ்ரீபிரசாத். தெலுங்கில் பணியாற்றி வந்தாலும் அவர் சிறு வயது முதலே சென்னையில்தான் வசித்து வருகிறார். அவரது தெலுங்குப்
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.