பிளாஷ்பேக் : எங்கே மோகனா?
சில நடிகைகள் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் காலத்திலேயே திடீரென்று நடிப்பை விட்டு விலகி விடுவார்கள், அதற்கான காரணத்தையும் அவர்கள் தெரிவிப்பதில்லை. சிலர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவார்கள். புகுந்த இடத்தில் நடிக்க கூடாது என்று தடை போடுவதோடு நீ சினிமா நடிகை என்பது கூட தெரியக்கூடாது என்ற கட்டுப்பாடுகளையும் அந்த காலத்தில் விதித்து விடுவார்கள். இதன் காரணமாக பல நடிகைகள் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்க பெறுவதில்லை. அப்படியானவர்களில் ஒருவர் மோகனா.
1957ம் ஆண்டு வெளிவந்த “ஆரவல்லி” என்ற படத்தில் ஆரவல்லியாக நடித்தவர் ஜி.வரலட்சுமி. சூரவல்லியாக நடித்தவர் மோகனா. ஜி.வரலட்சுமி பிற்காலத்தில் பெரிய நடிகையானார். ஆனால் மோகனா சில ஆண்டுகள் சில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போனார். 1957ம் ஆண்டு வெளிவந்த “புதுமைப்பித்தன்”, “மாயா பஜார்” மற்றும் நாடோடி மன்னன் படத்திலும் நடித்துள்ளார் மோகனா. ‛ஷியாமளா, மாயா பஜார், காத்தவராயன், குமுதம் ஆயிரம் ரூபாய், மாடி வீட்டு மாப்பிள்ள, சுமங்கலி, ஹரிச்சந்திரா, சாரங்கதரா, தாய் மகளுக்குக் கட்டிய தாலி, கற்புக்கரசி, மாங்கல்யம், எங்கள் செல்வி" போன்றவை இவர் நடித்த மிக முக்கிய படங்கள்.
பெரும்பாலான படங்களில் நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரங்களிலேயே நடித்துள்ளார். 20 வருடங்களில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சில படங்களில் நாயகியாக நடித்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகிக் கொண்டார்.
விஜயின் த.வெ.க கட்சியில் இணையும் திரை பிரபலம்
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கூட்டணிகளுக்கும் அமைச்சரவையில் இடமளித்து பெரும்பான்மை ஆதரவுடன் விஜய் கட்சி ஆட்சியில்
போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு.
மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தின் மூன்று பாகங்களிலும் அவரது மூத்த மகளாக நடித்தவர் நடிகை அன்சிபா ஹாசன். கடந்த வருடம் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியின்றி இணைச்
விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி
இயக்குனர் சிவாவின் தம்பி, நடிகர் பாலா. தமிழில் ‛‛அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தவிர மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். இவரது
கிராமத்துக் கதையில் நாயகனாக நடிக்கும் ரகுமான்
மலையாள நடிகராக இருந்தாலும் தமிழில் அதிக படங்களில் நடித்தவர் ரகுமான். ஆரம்ப காலங்களில் ஒரு சில கிராமிய படங்களில் நடித்தார் அதன் பிறகு நகர்ப்புற கதைகள் கிரைம் திரில்லர் படங்களில்
ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம்
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜெயராம், ஊர்வசி இணைந்து 26 படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். தற்போது 20 வருடங்களுக்குப் பிறகு தமிழில் ‛பரிமளா அண்ட் கோ என்ற படத்தில் ஜோடியாக
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.