பிளாஷ்பேக் : நடனத்தில் பத்மினியை வென்ற எம்ஜிஆர்
கதைப்படி நாட்டிய கலைஞரான பத்மினிக்கு அந்த கலையில் தான்தான் பெரிய ஜீனியஸ் என்ற நினைப்பு இருக்கும். நடன நிகழ்ச்சி ஒன்றில் பத்மினி ஆடுவார். அந்த நேரத்தில் அங்கு வரும் எம்ஜிஆர் அவரை விட சிறப்பாக ஆடி அனைவரையும் ஆச்சர்யப்படுத்துவார். பாடலின் முடிவில் பத்மினி களைப்படைந்து கீழே விழுந்து விட எம்.ஜி.ஆர் வென்று விடுவார்.
கதைப்படிதான் எம்ஜிஆர் ஜெயித்தார் என்றாலும் அன்றைக்கு நாட்டியத்தில் சிறந்து விளங்கிய பத்மினியுடன் எம்.ஜி.ஆர் போட்டி போட்டு நடனமாடியது ஆச்சர்யத்துடன் பார்க்கப்பட்டது.
நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் தயாரித்த "மன்னாதி மன்னன்" படம் 1960ல் வெளிவந்தது. இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி பத்மினி. அஞ்சலிதேவி, எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ்.வீரப்பா, ஜி.சகுந்தலா, லட்சுமி பிரபா, குலதெய்வம் வி.ஆர்.ராஜகோபால், திருப்பதிசாமி, லட்சுமி ராஜ்யம், அப்பா வெங்கடாஜலம், ஆழ்வார் குப்புசாமி, என்.எஸ்.நாராயணபிள்ளை, ஆர்.எம்.சேதுபதி, சிவானந்தம், ஆகியோரும் நடித்திருந்தனர். கதை, வசனம் கண்ணதாசன் எழுதியிருந்தார். எம்.நடேசன் இயக்கி இருந்தார். விசுவநாதன்-&ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர்.
“அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடமையடா” உள்பட 12 பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்தன.
கருப்பு வெளிநாட்டு வசூல் : 7 மில்லியன் யுஎஸ் டாலர்
சூர்யா, த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் நடித்து வெளிவந்த கருப்பு திரைப்படம் மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி சொல்லும் ராம் சரண் ரசிகர்கள்
தெலுங்கில் ராம்சரண் நடித்துள்ள படம் பெத்தி. ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜூன் நான்காம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் பாடல்கள்
மலையாள படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த லோகேஷ் கனகராஜ்
தமிழில் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள டிசி என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவருக்கு ஜோடியாக வாமிகா கபி நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திற்கு போட்டியாக களமிறங்கும் மூன்று படங்கள்!
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா தயாரித்து நடித்துள்ள படம் மா இண்டி பங்காரம். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதில், புதிதாக திருமணமான பெண்ணாக அவர் நடித்திருந்தார்.
விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன் : அமைச்சர் ராஜ்மோகன்
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் எச்.வினோத் உதவியாளர் ஹர்ஷா இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிப்பில் உருவாகும் பட அறிவிப்பை ,சென்னையில் இன்று பள்ளிக்கல்வி மற்றும் செய்தித்துறை அமைச்சர்
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.