திகில் முதல் காமெடி வரை.... வரிசைக் கட்டும் ஓடிடி ரிலீஸ்...!
வாரா வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை விட ஓடிடியில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரசிகர்களின் வரவேற்பால், ஓடிடி தளங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு புதுப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இந்த வாரம் வெளியாகும் படங்கள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
வாரண்ட்
இயக்குநர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் பிரசாத் பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் "வாரண்ட்". இந்த தொடரின் முதல் சீசன் நாளை (மே.22ம் தேதி) ஜீ5யில் வெளியாகவுள்ளது.
மேமு கோபுலம் (Memu Copulam)
தெலுங்கு இயக்குநர் பிரதீப் மடலி இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடி வெப் தொடர் "மேமு கோபுலம் (Memu Copulam)". காணாமல் போன சேவலைக் கண்டுபிடிக்கும் போது ஏற்படும் சம்பவங்கள் நகைச்சுவையாகச் சொல்லும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வெப் தொடர் நாளை (மே.22ம் தேதி) ஜீ5யில் வெளியாகவுள்ளது.
மதுவிது (Madhuvidu)
அறிமுக இயக்குநர் விஷ்ணு அரவிந்த் இயக்கத்தில் நடிகை கல்யாணி பணிக்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்துள்ள ரொமான்டிக் மலையாள திரைப்படம் "மதுவிது (Madhuvidu)". இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நாளை(மே.22ம் தேதி) சோனி லைவ்வில் வெளியாகவுள்ளது.
பீஷ்மர் (Bhishmar)
மலையாள இயக்குநர் ஈஸ்ட் கோஸ்ட் விஜயன் இயக்கத்தில் தயான் ஸ்ரீனிவாசன், விஷ்ணு உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வெளிவந்த திரைப்படம் "பீஷ்மர்( Bhishmar)". இந்த படம் நாளை (மே.22ம் தேதி) அமேசான் ப்ரைம், சன் நெக்ஸ்ட்டில் ரிலீசாகவுள்ளது.
ஷேஷா 2016(Shesha 2016)
கன்னட இயக்குநர் பிரதீப் அர்சிகேரே இயக்கத்தில் சித்தார்த் சிவா, டேன் டேவிஸ், பிரமோத் ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் "ஷேஷா 2016(Shesha 2016)". இந்த படம் கன்னடம், மலையாளம் மொழிகளில் சன் நெக்ஸ்ட்டில் நாளை (மே.22ம் தேதி) வெளியாகவுள்ளது.
சதி லீலாவதி(Sathi Leelavathi)
தெலுங்கு இயக்குநர் ததினேனி சத்யா இயக்கத்தில் லாவண்யா திரிபாதி, தேவ் மோகன், விகே நரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம்" சதி லீலாவதி(Sathi Leelavathi)". இந்த படம் நேற்று (மே.20ம் தேதி) ஜியோ ஹாட் ஸ்டாரில் ரிலீசாகியுள்ளது.
சாத்தான் தி டார்க் (Satan The Dark)
இயக்குநர் மணிகண்டன் ராமலிங்கம் இயக்கத்தில் வெளிவந்துள்ள த்ரில்லர் திரைப்படம் " சாத்தான் தி டார்க் (Satan The Dark)". இந்த திரைப்படத்தில் ஃபிரெட்ரிக் ஜான் (எஃப்.ஜே), ஐரா பாலக், மற்றும் சாந்தினி தமிழரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் நேற்று (மே.20ம் தேதி) அமேசான் ப்ரைம், ஆஹா தமிழ் மற்றும் டென்ட் கொட்டாவில் ரிலீசாகியுள்ளது.
விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடித்துள்ள படத்திற்கு ‛அப்பா குட்டி என பெயரிட்டுள்ளனர். மு மாறன் இயக்கும் இப்படத்தில் நாயகியாக பிரீத்தி அஸ்ரானி நடிக்க, லிதான்யா, பகவதி
காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி ஜூலை 24ல் ரிலீஸ்
ஹிந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்த சிக்கந்தர் படத்திற்கு பிறகு, தி இந்தியா ஸ்டோரி மற்றும் ராமாயணா படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்து வருகிறார் காஜல்
பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர்
ஹிந்தி படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா என்ற படத்தின் மூலம் தெலுங்குக்கு வந்தார். அந்த படம் கமர்சியல் ரீதியாக வெற்றி பெற்றதை அடுத்து தற்போது ராம்
அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன்
மேட் இன் கொரியா படத்திற்கு பிறகு கவின் நடிக்கும் ஒன்பதாவது படத்தில் கமிட்டாகி இருக்கும் பிரியங்கா மோகன், தற்போது சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் அரசன் படத்தில்
தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த கருப்பு
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ், தெலுங்கில் தன்னுடைய வெற்றியைப் பதிவு செய்துள்ளார் சூர்யா. அவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான கருப்பு படத்திற்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.