33 வருடங்களாகி விட்டதா... ஆச்சரியத்தில் குஷ்பு!
இளையராஜாவின் இசையில் இடம் பெற்ற இனிமையான பாடல்கள்தான் இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணம். பிரபுவின் அப்பாவித்தனமான நடிப்பு, குஷ்புவின் அழகான நடிப்பு என அந்தக் காலத்தில் ஆரவார வெற்றியைப் பெற்ற படம். பல ஊர்களில் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய காதல் திரைப்படம்.
இன்று இப்படத்தின் 33வது ஆண்டு நிறைவைடைந்துள்ளது. இது குறித்து குஷ்பு, “நேரம் பறக்கிறது என்று சொல்வார்கள், ஆம் அது உண்மைதான். தமிழக மக்களை புயலாய் தாக்கிய "சின்னதம்பி" படம் வெளிவந்து 33 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை நம்பவே முடியவில்லை. எங்களது வாழ்க்கையை என்றென்றும் மாற்றிய படம். அந்த அன்பு, பாசம், மரியாதை ஆகியவற்றை என் மீது பொழிந்தனர். அது இன்று வரை தொடர்வது நம்ப முடியாத ஒன்று. உங்கள் ஒவ்வொருவர் மீதும் எப்போதும் பணிவாகவும், நன்றியுடனும் இருப்பேன். உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
எனது அபிமானத்திற்குரிய இயக்குனர் பி.வாசு சார், எனது அபிமானத்துக்குரிய சக நடிகர் பிரபு சார், எப்போதும் எனக்கு ஸ்பெஷலானவர்கள். மறைந்த தயாரிப்பாளர் பாலு எப்போதும் நினைக்க வேண்டியவர். ஒளிப்பதிவாளர் ரவீந்தர், எனது சக நடிகர்கள், கலைஞர்கள் ஆகியோருக்கு நன்றி.
மந்திரவாதி… இளையராஜா அவர்கள், அவரது பாடல்கள் காலத்திற்கும் நம்மை வேட்டையாட வைக்கும். சின்னதம்பி 33 வருடங்கள் நிறைவு. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி, தலைவணங்குகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தனுஷ் அரசியலுக்கு வருவாரா இயக்குனர் கஸ்தூரிராஜா சொன்ன பதில்
சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் இயக்குநர் கஸ்தூரிராஜாவிடம் போயஸ் கார்டனில் வசிக்கும் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவாரா? என்று கேட்கப்பட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு
கருப்பு ஒளிப்பதிவாளருக்கு கார் பரிசளித்த சூர்யா
சூர்யா, திரிஷா, ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான படம் கருப்பு. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தப் படம் மாபெரும் வெற்றியைப்
மீண்டும் நடிக்க வந்தார் ரவி மோகன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் ஓரிரு வாரங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவரது தோழியான கெனிஷா அவரை விட்டுப் பிரிந்ததன் காரணமாக நடந்த சந்திப்பு அது.
ஜனநாயகன் பிரச்னை.. எனக்கு சொல்ல தைரியமில்லை: எச்.வினோத் ஓபன் டாக்
முதல்வர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கடைசி படம் ஜனநாயகன். எச்.வினோத் இயக்கியிருந்தார். ஜனவரி மாதம் ரிலீசாக வேண்டிய இப்படம், சென்சார் பிரச்னையால் பட ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.
பிளாஷ்பேக்: வியாபார போட்டியில் வென்று, வியப்பில் ஆழ்த்திய ஏ வி மெய்யப்ப செட்டியார்
ஒரே கதையை வேறு வேறு திரைக்கலைஞர்களைக் கொண்டு, வெவ்வேறு காலகட்டங்களில் திரைப்படமாக எடுத்து, வெற்றி என்ற இலக்கை எளிதில் எட்டிப் பிடிக்கும் சாமர்த்தியம் அறிந்த நம் தமிழ் திரையுலகில்,
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.