சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில்
எழுத்து அளவு
அ-
அ+
ரஜினி முருகன், ரெமோ, சீமராஜா ஆகிய 3 படங்களில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ். அந்த காலத்தில் இந்த ஜோடி வெற்றி கூட்டணியாக பேசப்பட்டது. இப்போது சிவகார்த்திகேயன் வேகமாக வளர்ந்துவிட்டார். இந்த வளர்ச்சி குறித்து கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறுகையில் "நானும் அவரும் ஒன்றாக வளர்ந்தோம். 3 படங்களில் நடித்தோம். டிவியில் இருந்து வந்தவர் சிவகார்த்திகேயன். பின்னர், சினிமாவில் என்ட்ரியாகி கடுமையாக உழைத்து கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து இன்றைக்கு நல்ல நிலையில் இருக்கிறார். நாங்கள் இருவரும் ஒன்றாக நடித்தோம். இன்றும் எங்கள் படங்கள் குறித்து மக்கள் பேசுவது மகிழ்ச்சி"" என்றார்.
மேலும் அவர் கூறுகையில் ""கல்யாணி பிரியதர்ஷன் வளர்ச்சியும் சந்தோசமாக இருக்கிறது. அவர் தந்தை பிரியதர்ஷன்தான் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். நானும் கல்யாணியும் நல்ல நட்பில் இருக்கிறோம், லோகா படம் பார்த்துவிட்டு அவரை பாராட்டினேன். தென்னிந்தியாவில் அதிக வசூல் செய்த ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் லோகா இடம் பெற்றுள்ளது பெருமை.
இப்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள நிறைய வருகின்றன. ஆனால், ஹீரோயின்களுக்கு சம்பளம் குறைவுதான். அவர்கள் நடிக்கும் படம் பிஸினஸ் ரீதியாக பல கோடி வசூலித்து, நல்ல லாபத்தை கொடுத்தால் அவர்கள் சம்பளமும் அதிகரிக்கும். என் அப்பா தயாரிப்பாளர் என்றாலும், எனக்கு படம் தயாரிப்பில் ஆர்வம் இல்லை" என்றார்.

Advertisement
கோலிவுட் செய்திகள்
நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்!
ஸ்டண்ட் மற்றும் காமெடி நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (வயது 47) கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பொருளாதார சிக்கல்களுக்கிடையே
கருப்பு படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல்
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா மற்றும் பலர் நடிப்பில் மே 15ம் தேதி வெளியான படம் கருப்பு. இப்படம் பைனான்ஸ் உள்ளிட்ட பிரச்னைகளால் திட்டமிட்டபடி மே 14ம் தேதி வெளியாகாமல் மே 15ம்
கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை
பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி, பேட்ட, ஜகமே தந்திரம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மகான், ரெட்ரோ ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். தன் ஒவ்வொரு படங்களிலும் தனக்கென தனி
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.