புறக்கணிப்பு : நேற்று அனுபமா... இன்று ஆண்ட்ரியா
விழாக்களில் கலந்து கொள்ளாததற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். ஓரிரு படங்களில் நடித்த நடிகைகள் கூட அவர்களது சமூக வலைத்தளங்களில் சில பல லட்சம் பாலோயர்களை வைத்திருப்பார்கள். ஆனால், சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்த தங்களது படங்களைப் பற்றி சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு கூட போடாத நடிகைகள் இருக்கிறார்கள். படம் ஆரம்பிக்கும் போது பதிவு போடுவதை விட படம் வெளியாகும் போது ஏதோ ஒன்றிரண்டு பதிவு போட்டால்தானே படம் வெளிவருவதாவது தெரியும். படத்தின் ஒரே ஒரு போஸ்டர் அல்லது படம் பற்றிய ஒரே ஒரு பதிவு போட்டால் கூட ஏதோ கொஞ்சம் ரசிகர்களாவது அப்படி ஒரு படம் வந்திருக்கிறது என்று போய்ப் பார்ப்பார்கள்.
கடந்த மாதம் வெளிவந்த "லாக்டவுன்" படம் பற்றி அப்படத்தின் முதன்மைக் கதாநாயகியான அனுபமா பரமேஸ்வரன் ஒரு பதிவு கூட போடவில்லை. கடந்த வாரம் வெளியான "கா" படம் பற்றி அப்படத்தின் முதன்மைக் கதாநாயகியான ஆண்ட்ரியாவும் எதுவுமே பதிவிடவில்லை. இரண்டு படங்களுமே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்கள்தான்.
கதை கேட்டு பிடித்துதான் அந்தப் படங்களில் நடித்து கொடுத்திருப்பார்கள். படம் எப்படி வந்திருந்தாலும் ஒரு குறைந்தபட்ச வரவேற்புக்காவது அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு போடலாம். இரண்டு படங்களுமே வந்த சுவடு தெரியாத படங்களாகவே உள்ளன. பாவம் அப்படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள்.
‛ஜனநாயகன் ரிலீஸ் : திருச்செந்தூரில் தயாரிப்பாளர் தந்த அப்டேட்
முதல்வர் விஜய் நடித்துள்ள கடைசி படம் ‛ஜனநாயகன். வினோத் இயக்க, பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜன., 9ம் தேதியே வெளியாக வேண்டிய படம் தணிக்கை சான்றிதழ் பிரச்னையால்
மே 28ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் கர
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு, கே.எஸ்.ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் கர. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இந்த படம் கடந்த
ஏஐ மூலம் ஆபாசப் படங்கள் : ருக்மிணி வசந்த் கண்டிப்பு
தமிழில் ஏஸ், மதராஸி படங்களில் நடித்தவர் கன்னட நடிகை ருக்மிணி வசந்த். கன்னடத்தில் டாக்சிக் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது பிரசாந்த் நீல் இயக்க, ஜுனியர் என்டிஆர்
சுந்தர்.சி, குஷ்பு 2வது மகள் அனந்திகா சுந்தரும் சினிமாவில் என்ட்ரி
இயக்குனர் சுந்தர்.சி சினிமாவில் 31 ஆண்டுகளாக இருக்கிறார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கிய குஷ்பு, பின்னர் ஹீரோயின் ஆகி தென்னிந்திய மொழிகளில் கலக்கினார். இப்போதும் சில
திரையுலகில் 40 வருடங்களை நிறைவு செய்த நாகார்ஜுனா
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாகார்ஜுனா. அவர் திரையுலகிற்கு வந்து இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1986ம் ஆண்டு வெளிவந்த தெலுங்குப் படமான விக்ரம் படத்தின்
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.