நடிக்க வந்தது ஏன்? - பிரதீப் ரங்கநாதன் விளக்கம்
நான் நடிப்பது ஒன்றும் புதியதல்ல. நான் இயக்கிய குறும்படங்களை நானே இயக்கி நடித்திருக்கிறேன். அப்படி 6 வருடங்களுக்கு முன்பு நான் இயக்கிய குறும்படம் தான் லவ் டுடே. அதில் நான் நடித்திருந்தேன். அந்த குறும்படத்தை தற்போது பெரிய படமாக உருவாக்கி இருக்கிறேன். லவ்டுடே கதையின் நான் நடிக்க வேண்டும் என்று எனக்காக எழுதிய கதை. அதனால் நான் நடிக்கிறேன்.
கோமாளி படத்திற்கு முன்பே முதல் படமாக இந்த படத்தை இயக்கி நடிக்க வேண்டும் என்றுதான் முடிவு செய்திருந்தேன். ஆனால் புதுமுகம் என்பதால் எல்லோரும் தயங்கினார்கள். அதனால் பெரிய ஹீரோவை வைத்து ஒரு படம் பண்ணி அதை வெற்றிப் படமாக்கி காட்டிவிட்டு இந்த படத்தை இயக்க முடிவு செய்தேன். தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரமும் கதையை கேட்டுவிட்டு நாங்களே தயாரிக்கிறோம் என்று முன்வந்தார்கள். இப்படித்தான் நடிக்க வந்தேன். இனி வரும் காலங்களில் நடிப்பு, இயக்கம் இரண்டையும் செய்வேன். மற்ற இயக்குனர்கள் படத்திலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன் என்றார்.
கருப்பு வெளிநாட்டு வசூல் : 7 மில்லியன் யுஎஸ் டாலர்
சூர்யா, த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் நடித்து வெளிவந்த கருப்பு திரைப்படம் மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி சொல்லும் ராம் சரண் ரசிகர்கள்
தெலுங்கில் ராம்சரண் நடித்துள்ள படம் பெத்தி. ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜூன் நான்காம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் பாடல்கள்
மலையாள படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த லோகேஷ் கனகராஜ்
தமிழில் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள டிசி என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவருக்கு ஜோடியாக வாமிகா கபி நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திற்கு போட்டியாக களமிறங்கும் மூன்று படங்கள்!
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா தயாரித்து நடித்துள்ள படம் மா இண்டி பங்காரம். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதில், புதிதாக திருமணமான பெண்ணாக அவர் நடித்திருந்தார்.
விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன் : அமைச்சர் ராஜ்மோகன்
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் எச்.வினோத் உதவியாளர் ஹர்ஷா இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிப்பில் உருவாகும் பட அறிவிப்பை ,சென்னையில் இன்று பள்ளிக்கல்வி மற்றும் செய்தித்துறை அமைச்சர்
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.