தெலுங்கில் சர்வானந்துடன் இணைந்து சித்தார்த் நடித்துள்ள படம் மகா சமுத்திரம். இந்த படத்தின் சண்டை காட்சி ஐதராபாத்தில் நடைபெற்றபோது சித்தார்த்தின் முதுகில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்ற சித்தார்த் தற்போது நலமுடன் இந்தியா திரும்பியிருக்கிறார்.
அதையடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அறுவை சிகிச்சை முடிந்து லண்டனில் இருந்து நாடு திரும்பி விட்டேன். தற்போது மகாசமுத்திரம் படத்தின் டப்பிங்கிற்காக ஐதராபாத்தில் இருக்கிறேன். அனைவரது வாழ்த்துக்கும் நன்றி. ஒரு சண்டை காட்சியின்போது எனது முதுகில் காயம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சைக்குப்பிறகு நலமுடன் இருக்கிறேன். சில மாதங்களுக்கு கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இப்போதைக்கு கடினமாக உழைத்த ஒரு அழகான படத்தை ரசிகர்களுடன் இணைந்து ரசிக்க தயாராக இருக்கிறேன். விரைவில் அனைவரையும் சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார் சித்தார்த்.
அறுவை சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பினார் சித்தார்த்
எழுத்து அளவு
அ-
அ+
Advertisement
கோலிவுட் செய்திகள்
இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர்
தமிழக அரசியல் வரலாற்றில் புதிய திருப்பமாய் இதற்கு முன்பு ஆண்ட இரண்டு முக்கிய கட்சிகளைத் தோற்கடித்து முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார் நடிகர் விஜய்.வாக்கு
சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி
தமிழக முதல்வராகப் பதவியேற்ற விஜய்யை பல நடிகர், நடிகைகள் வாழ்த்தி வரவேற்றனர். சிலரது பதிவுகளைப் பார்த்தால் அவர்கள் விஜய்யின் தவெக கட்சியில் சேர்ந்துவிட்டார்களோ என்று கூட நினைக்கத்
கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ?
சூர்யா, த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் நடித்த கருப்பு படம் நேற்று தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது. மே 14ம் தேதியே வெளியாகி இருக்க வேண்டிய படம் பைனான்ஸ் சிக்கல் காரணமாக ஒரு நாள்
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.