‛ஆன்டி கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன்
எழுத்து அளவு
அ-
அ+
90களில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் சிம்ரன். பல படங்களில் நாயகியாக நடித்தாலும், இவரது நடன அசைவுக்கு பலரும் ரசிகர்களாக இருந்தனர். சில படங்களில் கதாநாயகியாக இருந்தாலும் குழந்தைக்கு தாய் போன்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். குறித்தாக ‛கன்னத்தில் முத்தமிட்டாள்" படத்தில் இவரது நடிப்பு வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் அஜித் நடித்த ‛குட் பேட் அக்லி" படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்து பாராட்டை பெற்றார். தற்போது நடிகர் சசிகுமாருடன் ‛டூரிஸ்ட் பேமிலி" படத்திலும் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக லோகேஷ் குமார் இயக்கி வரும் ‛தி லாஸ்ட் ஒன்" படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனியார் விருது விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற சிம்ரன் பேசியதாவது: சமீபத்தில் சக நடிகையிடம் ஒருவரிடம் ஏன் இந்தப் படத்தில் நடித்தீர்கள் என ஆச்சரியமாகக் கேட்டேன். அதற்கு உடனடியாக, "உங்களைப் போல ஆன்டி கதாபாத்திரங்களில் நடிப்பதைவிட இது சிறந்தது" என அவரிடமிருந்து பதில் வந்தது. அந்த பதில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு புரிதலற்ற பதிலை எதிர்பார்க்கவில்லை. இதைவிடவும் நல்ல பதில் எனக்குக் கிடைத்திருக்கலாம்.
நான் 25 வயதிலேயே முக்கியமான "ஆன்டி" கதாபாத்திரத்தமாக ‛கன்னத்தில் முத்தமிட்டாள்" படத்தில் நடித்துள்ளேன். ‛டப்பா" கதாபாத்திரங்களில் நடிப்பதைவிட முக்கியமான "ஆன்டி" கதாபாத்திரத்தில் நடிக்கலாம்"" என காட்டமாக பேசினார் சிம்ரன். அவர் குறிப்பிட்ட அந்த நடிகை யாராக இருக்கும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலவிதமான கருத்துகளை கூறி வருகின்றனர்.
Advertisement
கோலிவுட் செய்திகள்
சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, சுபாஷ் கே ராஜ் இயக்க அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் படம் பிளாஸ்ட். ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அர்ஜூன், அபிராமி, அவர் மகளாக வரும்
முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?
தமிழக முதல்வர் விஜயை சில தினங்களுக்கு முன்பு நடிகர் சங்கத்தை சேர்ந்த நாசர், கார்த்தி, பூச்சிமுருகன், கருணாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து சொன்னார்கள். அப்படியே நடிகர் சங்கம்
தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம்
மீராகதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹபீபி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் கஸ்துாரி ராஜா முக்கியமான வேடத்தில் வருகிறார். இதில் கலந்து கொண்டு
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.