பிரபல கன்னட நடிகரின் ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ்குமார் கடந்த 1974ல் வெளியான "ஸ்ரீனிவாச கல்யாண" படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது வரை 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினி உடன் ‛ஜெயிலர்", தனுஷ் உடன் ‛கேப்டன் மில்லர்" ஆகிய படங்களிலும் நடித்தார்.
சமீபத்தில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்காவிற்கு கடந்த 19ம் தேதி சென்றார். அமெரிக்காவில் உள்ள புளோரிடாவின் மியாமி இன்ஸ்டியூட்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் சிவராஜ்குமார். அவருக்கு வெற்றிகரமாக சிறுநீரக புற்றுநோய் அறுவை சிகிச்சை நடந்து முடிவடைந்ததைத் தொடர்ந்து இது தொடர்பாக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முருகேஷ் மனோகரன் விளக்கம் தெரிவித்துள்ளார்.
அதில், "சிவராஜ்குமாரின் உடல்நிலை குறித்த அறிவிப்பை பகிர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அதில் அவருக்கு சிறுநீர்ப்பை அகற்றப்பட்டு செயற்கை சிறுநீர்ப்பை பொருத்தப்பட்டுள்ளது. சிவராஜ்குமார் தற்போது சீரான நிலையில் நலமுடன் இருக்கிறார், விரைவில் அவர் இயல்பு நிலைக்கு திரும்புவார் " என தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சிவராஜ்குமார் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், ‛‛சிவராஜ்குமாருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அவர் நலமாக உள்ளார், குணமடைந்து வருகிறார். ரசிகர்கள், நலம் விரும்பிகளின் ஆதரவுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி"" என தெரிவித்துள்ளார்.
சிவராஜ்குமாருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நிறைவு
எழுத்து அளவு
அ-
அ+
Advertisement
கோலிவுட் செய்திகள்
கருப்பு: இந்திய அளவில் முதல் 100 கோடியைப் பெற்ற சூர்யா
சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் கருப்பு. இப்படம் தமிழக வசூலாக 80 கோடியைக் கடந்ததாக அதன் வினியோகஸ்தர் சக்தி பிலிம் பேக்டரி நேற்று அறிவித்திருந்தார்.
அண்ணனின் கள்ளக்காதலை தடுக்கும் சகோதரிகள் : பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர் தொடரின் கதை
வருகிற 27ம் தேதி முதல் ஜியோ ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகும் வெப் தொடர் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ். போஸ் வெங்கட், காயத்ரி சாஸ்திரி, ராஜ் அய்யப்பா, நிகிலா சங்கர், லூதுப், கிஷோர், ஷ்ரவ்னிதா
துணிச்சலான கேரக்டரில் நடிக்கும் கோமலி பிரசாத்
சரண்ராஜ் செந்தில்குமார் என்ற புதுமுகம் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் படம், மண்டவெட்டி. நாட்டுப்புறக் கதைகள் மற்றும் மனித உணர்வுகளை இணைக்கும் சூப்பர் நேச்சுரல் கிரைம்
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.