ஆயிரம் கோடி வசூல் கனவு…. காத்திருக்கும் தமிழ் சினிமா….
பான் இந்தியா படங்கள் என்றாலே அதைத் தெலுங்கு இயக்குனர்கள் வசூலில் தட்டித் தூக்கிவிடுகின்றனர் என தெலுங்குத் திரையுலகத்தினர் பெருமையாக நினைக்கிறார்கள்.
"பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்" படங்களுக்காக ராஜமவுலி, "கல்கி 2898 ஏடி" படம் மூலம் நாக் அஷ்வின், "புஷ்பா 2" மூலம் சுகுமார் என நான்கு 1000 கோடி படங்களைத் தந்துள்ளனர் தெலுங்கு இயக்குனர்கள். இடையில் கன்னட இயக்குனரான பிரசாந்த் நீல் "கேஜிஎப் 2" மூலம் 1000 கோடி வசூலைத் தந்திருக்கிறார்.
தமிழ்ப் படமாக இல்லை என்றாலும், தமிழ் இயக்குனர் அட்லி இயக்கிய ஹிந்திப் படமான "ஜவான்" படமும் 2023ல் 1000 கோடி வசூலித்தது.
மேலே குறிப்பிட்ட 6 படங்களைத் தவிர "டங்கல், பதான்" ஆகிய 1000 கோடி படங்களை ஹிந்தி இயக்குனர்கள்தான் இயக்கியிருந்தார்கள். இந்தியத் திரையுலகத்தில் 1000 கோடி வசூலைக் கடந்த படங்கள் இவை.
அடுத்து எந்தப் படம் 1000 கோடி வசூலைப் பெறப் போகிறது என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதில் ஏதாவது ஒரு தமிழ்ப் படமாவது வந்துவிடாதா என தமிழ் சினிமா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அது இந்த ஆண்டில் நடக்குமா அல்லது அடுத்த ஆண்டில் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
தமிழிலிருந்து தெலுங்கிற்குச் சென்ற இயக்குனர் ஷங்கர் இயக்கிய "கேம் சேஞ்சர்" படம் 1000 கோடியைத் தரும் என்று எதிர்பார்க்கப்பட்டு 200 கோடியைத் தாண்டாமல் போய்விட்டது. தமிழிலிருந்து ஹிந்திக்குச் சென்ற இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கிய ஹிந்திப் படமான "சிக்கந்தர்" 200 கோடியைக் கூடத் தாண்டவில்லை.
முதல்வர் விஜய்க்கு டைம் கொடுங்க : குஷ்பு
சினிமா துறையிலிருந்து வந்து முதல்வராகி இருக்கும் நடிகர் விஜயை திரைத்துறையை சேர்ந்த சங்க நிர்வாகிகள் தொடர்ந்து சந்தித்த வண்ணம் உள்ளனர். நடிகர் சங்கம், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்
திரையரங்குகளுக்கு ஜாக்பாட்... இனி 5 காட்சி திரையிடலாம் : முதல்வர் விஜய் உத்தரவு
தமிழக தியேட்டர்களில் இதுவரை அனைத்து நாட்களிலும் 4 காட்சிகளும், பண்டிகை கால விடுமுறை நாட்களில் மட்டும் 5 காட்சிகளும் படங்கள் திரையிடப்பட்டன. இப்போது அதில் தமிழக அரசு மாற்றம் கொண்டு
ஆனந்தம் 25 வருடங்கள் : இயக்குனர் லிங்குசாமி நன்றி
சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி தயாரிப்பில், இயக்குனர் லிங்குசாமியின் அறிமுகப் படமாக 2001ம் ஆண்டு இதே மே 25ம் தேதி வெளியான படம் ஆனந்தம். அப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள்
இயக்குனர் சேரனின் தாயார் காலமானார்
பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் உள்ளிட்ட பல வெற்றி படங்களை எடுத்தவர் இயக்குனர் சேரன். ஏராளமா படங்களிலும் நடித்துள்ளார். இவரது தாயார் கமலா பாண்டியன், 84, காலமானார். வயது
கார்த்தி 30 துவங்கியது
தமிழில் சர்தார் 2, மார்ஷல் படங்களில் நடித்துள்ள கார்த்தி, அடுத்தப்படியாக தெலுங்கில் மேட் என்ற படத்தை இயக்கிய கல்யான் சங்கருடன் இணைந்திருக்கிறார். இது கார்த்தியின் 30-வது படமாக
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.