பீட்டர் பால் என்பவரை வனிதா விஜயகுமார் மூன்றாவதாக திருமணம் செய்தபோது அவரை லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் சோசியல் மீடியாவில் கடுமையாக விமர்சித்தனர். முறையாக விவாகரத்து பெறாத இன்னொரு பெண்ணின் கணவரை அபகரித்து விட்டார் என்றும் வனிதா மீது குற்றம் சாட்டினர். அதையடுத்து வெகுண்டெழுந்த வனிதா, லட்சுமிராமகிருஷ்ணனை ஒரு லைவ் பேட்டியில் வாடி போடி என்று கடுமையான வார்த்தைகளால் வெளுத்து வாங்கினார்.
இதனால் தன்னை அவதூறாக பேசி விட்டதாக வனிதா மீது மானநஷ்டஈடு வழக்குத் தொடர்ந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன. அதையடுத்து தனது சொந்த வாழ்க்கையில் தலையிட்டு தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டதாக லட்சுமி ராமகிருஷ்ணன் மீது வனிதா விஜயகுமாரும் ஒரு வழக்கு தொடர்ந்தார். இப்படி பல எதிர்ப்பு விமர்சனங்களுக்கு மத்தியில் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டபோதிலும் நான்கே மாதங்களில் அவரது நடவடிக்கை பிடிக்காமல் அவரை பிரிந்தார் வனிதா.
இந்தநிலையில், சமீபத்தில் நடிகர் பவர் ஸ்டாருடன் நடிக்கும் பிக்கப் டிராப் படத்திற்காக மாலை மாற்றியபடி வனிதா எடுத்துக்கொண்ட போட்டோக்கள் வைரலாகின. இந்த போட்டோவை பதிவிட்டு லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஒருவர் டேக் செய்தார். அதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கண்களில் நீர் வரும் சிரிக்கும் எமோஜியை பதிவிட்டார். கூடவே இன்னொரு டுவீட்டில் நகைச்சுவையாக உள்ளது, ஆனால் தயவு செய்து எனக்கு டேக் செய் வேண்டாம் என பதிவிட்டார். இருப்பினும் அந்த டுவீட்டை அவர் நீக்கிவிட்டார். ஆனாலும் இது வைரலாகிவிட்டது.
இதையடுத்து லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா பதிலடி கொடுத்துள்ளார். அதுப்பற்றி டுவிட்டரில், ‛‛அருவருப்பான விஷப்பெண்மணி லட்சுமி ராமகிருஷ்ணன். எனது ரகசிய அபிமானியாகவும், தீவிர ரசிகையாகவும் இருந்ததற்கு நன்றி"" என பதிவிட்டுள்ளார்.
விஷப்பெண்மணி லட்சுமி ராமகிருஷ்ணன் : வனிதா பதிலடி
எழுத்து அளவு
அ-
அ+
Advertisement
கோலிவுட் செய்திகள்
புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன்
சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள கருப்பு படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்தபடியாக தெலுங்கு மலையாள படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில்
ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது!
தெலுங்கில் ராம்சரண் தற்போது நடித்துள்ள படம் பெத்தி. புச்சி பாபு சனா என்பவர் இயக்கியுள்ள இந்த படம் ஜூன் நான்காம் தேதி திரைக்கு வருகிறது. கிராமப்புற விளையாட்டு கதையில் உருவாகியுள்ள
எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு
நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா, ஓஹோ எந்தன் பேபி என்ற படத்தில் அறிமுகமானார். கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கிய அந்த படத்தை விஷ்ணு விஷாலே தயாரித்திருந்தார். இந்நிலையில் அந்த
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.