மீண்டும் வருவாரா வடிவேலு : ரசிகர்கள் எதிர்பார்ப்பு
அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை பகைத்துக் கொள்ள விரும்பாத திரையுலகினர் வடிவேலுவை தங்களது படங்களில் நடிக்க வைப்பதை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டனர். அதனால், இனி நகைச்சுவை வேடங்களில் நடிக்காமல் நாயகனாக நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார் வடிவேலு.
2014ம் ஆண்டில் தெனாலிராமன், 2015ம் ஆண்டில் எலி ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார். ஆனால், இரண்டு படங்களுமே படுதோல்வியடைந்தது. அதன்பின் 2016ல் நடைபெற்ற தேர்தலிலும் அதிமுகவே ஆட்சியைப் பிடித்தது. இருந்தாலும் நாயகனாக நடிப்பது வெற்றி பெறாமல் போகவே மீண்டும் நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
கத்தி சண்டை, சிவலிங்கா, மெர்சல் ஆகிய படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். இருந்தாலும் தான் முதன் முதலாக நாயகனாக நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் தந்த மாபெரும் வெற்றி காரணமாக அப்படத்தின் இரண்டாம் பாகமான இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் 2017 ல் நடிக்க ஆரம்பித்தார். படப்பிடிப்பு ஆரம்பமான சில நாட்களிலேயே வடிவேலுவுக்கும் அப்படத்தின் இயக்குனர் சிம்புதேவன், தயாரிப்பாளர் ஷங்கர் ஆகியோருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
படத்திற்காக பல கோடி செலவு செய்து அரங்கம் அமைத்துவிட்டோம், வடிவேலு நடிக்க வர மறுக்கிறார் என அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார் ஷங்கர். அதைப் பற்றி தயாரிப்பாளர் சங்கம் விசாரித்தது. ஷங்கர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக வடிவேலுவை தொடர்ந்து படங்களில் நடிக்க மறைமுகமாக ரெட் விதித்தாக சொல்லப்பட்டது. அவரும் வேறு எந்தப் படத்திலும் நடிக்க முயற்சி செய்யவில்லை. தனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட ஆரம்பித்து, சில நல்ல விஷயங்களை தனது மகன், மகள்களுக்காக செய்து முடித்தார்.
2011ல் நடந்த சட்டசபை தேர்தலில் திமுகவிற்காக வடிவேலு பிரச்சாரம் செய்ததால்தான் அவரை ஓரம் கட்டினார்கள் என்ற ஒரு தகவல் மக்களிடம் பரவியுள்ளது. ஆனால், அதில் பல்வேறு திரையுலக அரசியலும் கலந்துள்ளது என்பது பலருக்கும் தெரியாத விஷயம். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ளதால் வடிவேலு மீண்டும் சினிமாவில் நடிக்க வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.
கடந்த பத்து வருடங்களாக சினிமாவில் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும் மீம்ஸ் கிரியேட்டர்களின் பல மீம்ஸ்களில் வடிவேலுதான் கதாநாயகனாக இருந்து வருகிறார். ரசிகர்கள் அனைவரின் எதிர்பார்ப்பின்படி வடிவேலு தன்னுடைய புதிய படம் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
சூர்யா, த்ரிஷாவுக்கு நிம்மதியை கொடுத்த ‛கருப்பு வெற்றி
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்த ‛கருப்பு படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ் தெலுங்கு மற்றும் உலக அளவில் சேர்த்து இந்த வாரத்தில் 200 கோடியை தாண்டும் என்று
கேன்ஸ் திரைவிழாவில் தாழ் திறவா
திகில் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் படம் “தாழ் திறவா”. பரணி சேகரன் இயக்கத்தில், ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் நடித்துள்ள இந்த படம், மாறுபட்ட களத்தில் உருவாகும்
ராம் பொதினேனி படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் பொதினேனி முதல்முறையாக கதை எழுதி ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்தை அவரின் ரெப்போ சினிமாடிக்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து,
நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்?
தமிழில் பீட்சா, ஜிகிர்தண்டா, பேட்ட, ஜகமே தந்திரம், ரெட்ரோ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். தவிர தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் மூலம் படங்களும் தயாரிக்கிறார். சினிமாவில்
‛இம்மார்ட்டல் படப்பிடிப்பு நிறைவு
மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கயாடு லோகர் இணைந்து நடித்துள்ள படம் இம்மார்ட்டல். இதில் டி.எம்.கார்த்திக், லொல்லு சபா மாறன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.