தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷ். 2013ல் வெளிவந்த "கௌரவம்" படத்தின் மூலம் தமிழ், தெலுங்கில் அறிமுகமானார். அதன்பின் தெலுங்கில் சில படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்துள்ளார்.
அவரது அடுத்த படமாக நேற்று "பட்ட்டி"(Buddy) என்ற படம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் ஆர்யா நடித்து வெளிவந்த "டெடி" படத்தின் ரீமேக்காக அப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த "டெடி" பொம்மையுடன் அல்லு சிரிஷ் இருக்கும் போஸ்டரைத்தான் நேற்று வெளியிட்டார்கள். கூடவே, ஒரு முன்னோட்ட வீடியோ ஒன்றும் வெளியானது.
ஆனால், படத்தை "டெடி" ரீமேக்காக எடுக்கவில்லையாம். வேறு ஒரு கதையை எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். தமிழ் இயக்குனரான சாம் ஆண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். "டெடி" பொம்மையை மட்டும் ஒரு கதாபாத்திரமாக வைத்துக் கொண்டு புதிய கதையை எழுதியிருக்கிறார்களாம். அது என்ன மாதிரியான கதை என்பது படம் வெளிவந்த பிறகே தெரியும்.
இதனிடையே, இப்படம் குறித்து போட்ட டுவிட்டர் பதிவுகளில் கமெண்ட் பகுதியை ஆப் செய்து வைத்திருக்கிறார் அல்லு சிரிஷ்.
கமெண்ட்டுகளை ஆப் செய்த பட்ட்டி(Buddy) நாயகன் அல்லு சிரிஷ்
எழுத்து அளவு
அ-
அ+
Advertisement
கோலிவுட் செய்திகள்
மேடையில் கெட்ட வார்த்தை பேசி பின் சமாளித்த ராஷ்மிகா
ஹோமி அடஜானியா இயக்கத்தில், ஷாகித் கபூர், ராஷ்மிகா மந்தனா, கிர்த்தி சனோன் மற்றும் பலர் நடிக்கும் ஹிந்திப் படம் காக்டெயில் 2. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று மும்பையில்
முதல்வர் விஜய்க்கு தனித்தனியே கோரிக்கை வைத்த கமல்ஹாசன், விஷால்
தமிழ் சினிமாவிலிருந்து மற்றுமொருவராக நடிகர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். அவரை இதுவரையில் நடிகர் சங்க நிர்வாகிகள், இயக்குனர் விக்ரமன், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் மட்டுமே
முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா?
நடிகர் ரஜினிகாந்த், நேற்று திடீர் பிரஸ்மீட் வைத்து பரபரப்பை ஏற்படுத்திவிட்டார். தமிழக முதல்வருக்கும் தனக்கும் மனஸ்தாபம், அவர் முதல்வர் ஆனதில் தனக்கு மகிழ்ச்சி இல்லை என்பது போல
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.