சின்னத்திரை நடிகைக்கு கொலை மிரட்டல் : நான் காரணமில்லை என்று சரண்டர் ஆன கணவர்!
சின்னத்திரை நடிகரான ஈஸ்வர் மீது அவரது மனைவியும், நடிகையுமான ஜெயஸ்ரீ, கடந்த 2019 வருடம் ஈஸ்வர் தன்னை கொடுமைப்படுத்துவதாக அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து ஈஸ்வரும் ஜெயஸ்ரீயும் பிரிந்து தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயஸ்ரீயின் உயிருக்கு ஆபத்து, ஏதாவது நேர்ந்தால் அதற்கு தான் காரணமில்லை என காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார் ஈஸ்வர். புகார் அளித்த பின் அது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜெயஸ்ரீ தற்போது எங்களது அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் மருத்துவர் ராகேஷ் என்பவருடன் ஒன்றாக வசித்து வருகிறார். இவர்களின் இந்த உறவு ராகேஷின் தந்தை சண்முகத்திற்கு பிடிக்கவில்லை.
தொழிலதிபர் மற்றும் சினிமா தயாரிப்பாளரான சண்முகம் ஜெயஸ்ரீ தனது மகனை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என என்னிடம் புலம்பினார். எனது விவாகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் நான் அதுகுறித்து பேச முடியாது என்று கூறினேன். ஆத்திரமடைந்த அவர் ஜெயஸ்ரீ தனது மகனை விட்டு பிரிந்து செல்லவில்லை என்றால் அவள் மீது காரை ஏற்றி கொலை செய்துவிடுவேன் என்று கூறினார். இதனால் ஜெயஸ்ரீக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லை என்று காவல் ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறேன்" என கூறியுள்ளார்.
மேலும், ஜெயஸ்ரீ பணம் பறிக்கும் நோக்கத்தில் பல பேரிடம் பழகி வருவதாகவும், பொய் காரணங்களை சொல்லி விவகாரத்து வழக்கில் ஆஜராகமால் எஸ்கேப் ஆகி வருவதாகவும் அந்த பேட்டியில் ஈஸ்வர் கூறினார்.
விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்
நீரும் நெருப்பும், தீனா, மதராஸி - ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.