இந்த வாரம், புதிய படங்கள் இல்லையா ?
2026ம் ஆண்டின் முதல் பெரிய வெற்றியாக கடந்த வாரம் வெளியான "கருப்பு" படம் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் 147 கோடி வசூலித்ததாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். 100 கோடி வசூலைக் கடந்து, லாபத்தைக் கொடுக்கக் கூடிய படமாக இப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் "கருப்பு" படத்துடன் “கரா, சட்டென்று மாறுது வானிலை” ஆகிய படங்கள் வெளிவந்தன. அந்தப் படங்களுடன் இந்த வருடத்தில் இதுவரையில் வெளியான படங்களின் எண்ணிக்கை 90ஐக் கடந்துவிட்டது.
இந்த வாரத்தின் வெள்ளிக்கிழமையான மே 22ம் தேதி புதிய படங்களின் அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு சில படங்கள் வெளிவர வாய்ப்புள்ளது.
அடுத்த வாரம் மே 28ம் தேதி அர்ஜுன், அபிராமி நடித்த "பிளாஸ்ட்" படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை அடுத்த வாரத்துடன் நிறைவுக்கு வர உள்ளதால் மேலும் சில படங்கள் வெளியாகலாம்.
ஜுன் மாதத்திற்கான வெளியீடுகள் என்னென்ன என்பது விஜய்யின் கடைசி படமான "ஜனநாயகன்" படத்தின் அறிவிப்பு வந்த பிறகுதான் தெரிய வரும்.
42 வயதில் இப்படியொரு பிட்னஸா? ரகசியம் பகிரும் அபிராமி
நடிகை அபிராமி, தமிழில் மிடில் கிளாஸ் மாதவன், சமுத்திரம், விருமாண்டி, மகாராஜா, தக் லைப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரசிகர்களிடமும் பரிச்சயமான அபிராமி, இதுவரை தான் நடித்த
எனக்கு பிடித்த படம் ரிதம்: அர்ஜூன் பேட்டி
சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடித்துள்ள படம் பிளாஸ்ட். ஏஜிஎஸ் கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் அர்ஜுனுடன் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, ஜான்
வடசென்னையின் வாழ்வியலை பேசும் ஆல்பாஸ்
வட சென்னை என்றாலே இதுவரைக்கும் அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம் பகை கொலை என்றே தமிழ் சினிமாவில் காட்டி வந்திருக்கிறார்கள். முதல்முறையாக இது எதுவுமே இல்லாத வட சென்னை மக்களின் எதார்த்த
கமல்ஹாசனை தொடர்ந்து பிரைவேட் ஜெட்டை தவிர்க்கும் அல்லு அர்ஜுன்
பிரபல முன்னணி ஹீரோக்கள் தங்கள் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்கு தனி பிரைவேட் ஜெட்டுகளில் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர்
தன்னை நிரூபிக்க விஜய்க்கு நேரம் கொடுக்க வேண்டும் ; சுரேஷ்கோபி ஆதரவு குரல்
நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கி சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் போட்டியிட்டு தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்று விட்டார். ஒரு பக்கம் திரையுலகை சேர்ந்தவர்கள் மற்றும்
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.