சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்த சூப்பர் சிங்கர் பிரபலம்
சூப்பர் சிங்கர் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் சவுந்தர்யா பாலா நந்தகுமார். தொடர்ந்து விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் தோன்றி மக்களை மகிழ்வித்து வருகிறார். வெள்ளித்திரையில் "கபாலி", "மாஸ்டர்" உள்ளிட்ட சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தோன்றியிருந்தாலும், ஒரு நடிகை என்ற அந்தஸ்தை சவுந்தர்யாவுக்கு பெற்று தந்தது சின்னத்திரை தான்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான "பகல்நிலவு" தொடரில் சவுந்தர்யா ஹீரோயினாக நடித்து இளைஞர்களின் ஏகபோக ஆதரவை பெற்றார். அந்த சீரியல் முடிந்த பின் வேறு சீரியலில் கமிட்டாவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்புகள் சரிவர அமையவில்லை. இந்நிலையில் ஜீ தமிழில் நேற்று, ஞாயிறு அன்று ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் திருமண வைபோகம் ஸ்பெஷல் எபிசோடில் சவுந்தர்யா மணமகளாக நடித்திருந்தார். அவரது கதாபாத்திரம் முக்கிய கதாபாத்திரமாக வளர்த்தெடுக்கப்படுமா அல்லது கெஸ்ட் அப்பியரன்ஸ் போன்ற சிறு ரோலாக போய்விடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இருப்பினும் நீண்ட இடைவெளிக்கு பின் சவுந்தர்யா சின்னத்திரையில் நடிகையாக ரீ என்ட்ரி கொடுத்துள்ளதால் அவரது ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியாக உள்ளனர்.
விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்
நீரும் நெருப்பும், தீனா, மதராஸி - ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.