தமிழ் சினிமாவின் வசூல் வறட்சி…. கோடையில் தீரும்…???
எதற்கு அந்த "மதராஸி" கதை என்றால், சிவகார்த்திகேயன் நடித்து பொங்கலுக்கு வெளிவந்த "பராசக்தி" படம்தான் இந்த வருடத்தின் முதல் 100 கோடி படம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட படம். இருப்பினும், இந்தப் படம் வெற்றிப் படமா என்றால் அது சந்தேகம்தான். படத்தின் பட்ஜெட் மட்டுமே 150 கோடிக்கு மேல் என்று சொல்கிறார்கள். இன்னும் ஒரு வருடம் கழித்து படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மீது புகார் அளிக்காமல் இருந்தால் நம்புவோமாக.
அதன்பின் வந்த படங்களில் ராதிகா நடித்து வெளிவந்த "தாய் கிழவி" படம் 75 கோடியும், "யூத்" படம் 50 கோடியும், "வித் லவ்" படம் 35 கோடியும் வசூலித்தது என தயாரிப்பு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. "தலைவர் தம்பி தலைமையில்" படம் 40 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது எனத் தகவல். இந்தப் படங்கள் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதால் லாபகரமாக அமைந்தது என்கிறார்கள். ஆனாலும், 100 கோடி வசூல், 200 கோடி வசூல் என்று சொல்லுமளவிற்கு படங்களும் வரவில்லை. முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இருந்தாலும் விரைவில் ஆரம்பமாக உள்ள கோடை காலத்தில், தமிழ் சினிமாவின் வசூல் வறட்சியைப் போக்கும் அளவிற்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்கள் வர உள்ளது திரையுலகத்தில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாரம் ஏப்ரல் 3ம் தேதி, “கார்மேனி செல்வம், கெஸ்ட், காளிதாஸ் 2, லீடர், மரகத மலை, நீளிரா,” ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் எந்தப் படம் நன்றாக இருக்கிறதோ அந்தப் படம் வரவேற்பைப் பெற வாய்ப்புள்ளது. சொல்லப் போனால் எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாத படங்கள்.
அதற்கடுத்து ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ள படம் "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி". இந்தப் படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம்தான். அதாவது அப்போதாவது இந்தப் படம் கண்டிப்பாக வந்துவிடுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம். ஏற்கெனவே மூன்று முறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்ட படம் என்பதுதான் அதற்குக் காரணம்.
பிரதீப் ரங்கநாதன் நடித்து கடந்த வருடம் வெளிவந்த "டிராகன், டியூட்" ஆகிய இரண்டு படங்களும் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த படங்கள். அது போல பிரதீப் நடித்த "லவ் இன்சூரன்ஸ் கம்பெனியும்" 100 கோடியை வசூலிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் அனிருத் கூட்டணி சேர்ந்திருப்பதும் கூடுதல் எதிர்பார்ப்பு. சயின்ஸ் பிக்ஷன் காதல் கதை என்று சொல்கிறார்கள். சுவாரசியமாக இருந்தால் 100 கோடி கன்பர்ம் என்று சொல்லலாம். அப்படி நடந்தால் தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் 100 கோடி தந்த முதல் ஹீரோ என்ற சாதனையை ஏற்படுத்துவார் பிரதீப் ரங்கநாதன்.
ஏப்ரல் 30ம் தேதி முன்னணி நடிகரான தனுஷ் நடித்துள்ள "கர" படம் வெளியாக உள்ளது. 2023ம் ஆண்டின் முக்கிய வெற்றிப் படமான "போர் தொழில்" படம் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் ராஜா இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க, மமிதா பைஜு, கேஎஸ் ரவிக்குமார், சுராஜ் வெஞ்சரமூடு, கருணாஸ், ஜெயராம் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். தனுஷ் நடித்து கடந்த வருடம் வெளிவந்த "இட்லி கடை, குபேரா" ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவியவை. அதனால், அவரும் "கர" படத்தின் வெற்றியைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்.
மே 14ம் தேதி சூர்யா நடித்துள்ள "கருப்பு" படம் வெளியாக உள்ளது. ஆர்ஜே பாலாஜி இயக்கி முக்கிய வேடத்திலும் நடிக்க, த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, இந்திரன்ஸ், நட்டி, ஸ்வாசிகா, ஷிவதா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த வருடமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம். ஆனால், சில பல காரணங்களால் தள்ளிப் போய் வெளியாகப் போகிறது. சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாக, வெளிவந்த படங்கள் அனைத்துமே தோல்வி தான். இந்தப் படத்தின் வெற்றி அவருக்கு மிக முக்கியமானது. அடுத்தடுத்து அவர் நடிக்க தயாரிப்பில் இருக்கும் படங்களின் எதிர்காலம் "கருப்பு" காப்பாற்றுவதில் இருக்கிறது.
இரண்டு வார இடைவெளியில் மூன்று படங்கள் வெளியாக உள்ளன. தமிழக சட்டசபைத் தேர்தல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், ரெடியாக உள்ள இந்தப் படங்களின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இவற்றிற்கு இடையில் வேறு சில படங்களும் வரலாம். கோடை விடுமுறை முடிவதற்கு முன்பாகவும் சில படங்கள் வரலாம்.
இப்போதைக்கு "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, கர, கருப்பு" ஆகிய படங்கள்தான் கோடையில் வசூல் மழையைத் தரும் என்ற சினிமா நிலை முன் அறிக்கையைத் தந்துள்ள படங்கள். திரையுலகினர் எதிர்பார்ப்பின்படி அது நடக்கட்டும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருப்போம்.
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.
ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம்
2026ம் ஆண்டின் நான்கு மாதங்கள் முடிவடைந்து ஐந்தாவது மாதத்தில் போய்க் கொண்டிருக்கிறோம். தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடத்திலும் ஏப்ரல் மாதம் என்பது சிறப்பான ஒரு மாதமாக அமையும்.பொங்கல்,
2026 தமிழக தேர்தல் களம் : இருமுனை போட்டியா... நான்குமுனை போட்டியா... விஜய்க்கு எப்படி... : திரைப்பிரபலங்களின் கருத்து
தமிழக சட்டசபை தேர்தல் இந்தமுறை கவனம் பெற்றுள்ளது, ஏனெனில் நடிகர் விஜய் அரசியல் களத்தில் இறங்கி தனித்து போட்டியிடுகிறார். விஜயின் அரசியல் வருகையால் தமிழகத்தில் எந்த மாதிரியான
மார்ச் 2026 : 21 படங்களில் ஒரே ஒரு படம்தான் வெற்றி…
2026ம் ஆண்டின் மூன்றாவது மாதமான மார்ச் மாதம் நாளையுடன் முடிவடைகிறது. இந்த மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான கடந்த வாரம் மார்ச் 27ம் தேதி 3 படங்கள் வெளிவந்தன. அந்தப் படங்களுடன் சேர்த்து
KayD · Mississauga
ஏற்கனவே lik ரிலீஸ் ஆகி low income kompany லிஸ்ட்ல சேர்ந்து விட்டதுனு ஊர் பக்கம் பேசிக்கிறாங்க