இன்றைய காலை முக்கியச் செய்திகள் | விஜய்க்கு மோடி அட்வைஸ் | 8 AM | 31-05-2026
எழுத்து அளவு
அ-
அ+
டெல்லியில் பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார், தமிழக முதல்வர் விஜய்.
மோடியை குறைந்த நேரம் தான் சந்தித்தார் முதல்வர். ஆனாலும், இந்த சந்திப்பில் பல விஷயங்கள் பேசப்பட்டன.
விஜயின் வெற்றியைப் பாராட்டிய மோடி, அவருக்கு சில ஆலோசனைகள் அளித்தாராம்.
நீங்கள் உட்பட அமைச்சர்கள் அனைவருமே புதியவர்கள்.
அரசு செயல்படுவது எப்படி என்பது குறித்து, அமைச்சர்களுக்கு ஒருங்கிணைப்பு பயிற்சி ஆலோசனை கூட்டம் நடத்துங்கள்.
அது, உங்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும் என, முதல்வரிடம் பிரதமர் கூறினாராம்.
நான் எப்போதும் என் அமைச்சர்களுக்கும், எம்.பி.,க்களுக்கும் சொல்லும் ஒரு விஷயத்தையும் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
நிருபர்களுடனோ அல்லது தெரியாத ஆட்களுடனோ பேசும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ரகசிய கேமரா மூலம் நீங்கள் பேசுவதை பதிவு செய்து, உங்களையோ அல்லது அமைச்சர்களையோ மாட்டிவிட முயற்சிகள் நடக்கலாம்.
இதை உங்கள் அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கும் தெரிவித்து, மிகவும் கவனமுடன் பணியாற்ற சொல்லுங்கள் என்றாராம் பிரதமர் மோடி.
#CMVijay
#PMModi
#NirmalaSitharaman
#DelhiMeeting
#TamilNaduGovernment
#TVKChief
#ShaktikantaDas
#TVSomanathan
#MekedatuDamIssue
#AnaimangalamCopperPlates
#PoliticalUpdatesTN
#PMOIndia
#TNPolitics
Advertisement
மேலும் வீடியோ
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.