சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு 47 எம்எல்ஏக்கள் கிடைத்தனர். தேர்தலுக்கு பின், தவெக அரசுக்கு ஆதரவு தரும் முடிவுடன், 25 பேர் எஸ்பி வேலுமணி தலைமையில் தனி அணியாக பிரிந்தனர். எஞ்சிய 22 பேர் பழனிசாமியுடன் இருந்தனர். இச்சூழலில், எஸ்பி வேலுமணி அணியில் இருந்த எம்எல்ஏக்கள் சுகுமார், மோகன், திலீபன், ஹரிபாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் மீண்டும் பழனிசாமி அணிக்கு திரும்பி சென்றனர். வேலுமணி தரப்பு அதிர்ச்சி அடைந்த நிலையில், அடுத்த அதிரடி நடந்தது.