சென்னையைச் சேர்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் வட தமிழக தலைவர் சொக்கலிங்கம் என்பவர், ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார். தமிழக கோவில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை முற்றிலும் அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி இருந்தார். இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் சுவாமிநாதன்,லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, அறநிலையத் துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்த உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, மே 29ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத் துறை செயலரின் அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலசுப்பிரமணியம் கோர்ட்டில் வாதாடினார். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயில் நடை, வழக்கமாக மதியம் 1 மணிக்கு தான் அடைக்கப்படும். மே 15ம் தேதி நடை அடைக்கும் முன்பே, கோயிலுக்குள், மதியம் 12:51 மணிக்கு, அமைச்சர் நிர்மல்குமார் நுழைந்து விட்டார். மூலவர் சன்னிதியில், மதியம் 12:59 மணிக்கு தரிசனம் முடித்துவிட்டு, 1:06 மணிக்கு வெளியே வந்துவிட்டார். நிகழ்வுகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. அமைச்சரால் மற்ற பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை என அவர் கூறினார். இதை ஏற்ற நீதிபதிகள் கூறியதாவது, இந்த விவகாரத்தில் யாரையும் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்க விரும்பவில்லை. #MadrasHigh Court #HighCourtRuling #TempleDevotees #VIPDarshan #DinamalarNews #TamilNaduNews #TempleAdministration #EqualityInWorship #TNPolitics #BreakingNewsTN #HighCourtOrder #HRandCE #LatestNewsTamil #Dinamalar