தமிழக அரசு பாடதிட்டத்தின் கீழ் பயின்ற பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. அறிவியல், கணிணி அறிவியல், வணிகம், ஒகேஷ்னல் என அனைத்து வகை பாடப்பிரிவுகளுக்கும் மார்ச் இறுதியில் தேர்வு முடிந்தது. தமிழகம் முழுதும் 8.27 லட்சம் மாணவ - மாணவியர் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கு முன்கூட்டியே பிராக்டிகல் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது.