பிளாஷ்பேக் : மனோரமாவின் கணவரைத் தெரியுமா?

1
பிளாஷ்பேக் : மனோரமாவின் கணவரைத் தெரியுமா?
Advertisement
எழுத்து அளவு

மனோரமாவின் கணவரின் பெயர் ராமநாதன். அவர் ஒரு நாடக நடிகராக இருந்தார். மற்றும் நாடக கம்பெனிகளின் மேனேஜராகவும் இருந்தார். பல நாடகங்களில் மனோரமா நடிக்க வாய்ப்புகள் வாங்கிக் கொடுத்தார். இதனால் மனோரமா அவரை காதலித்தார். பின்னாளில் மனோரமா சினிமாவில் பெரிய நடிகை ஆனதும், ராமநாதன் அவரது மேனேஜராக இருந்தார். அவ்வப்போது சினிமாவிலும் நடித்தார்.

ராமநாதன் கதையின் நாயகனாக நடித்த படம் "கண் திறந்தது". இந்தப் படத்தை கே.வி.ஸ்ரீனிவாசன் என்பவர் இயக்கினார். ராமநாதன் ஜோடியாக மைனாவதி நடித்தார். இவர்களுடன் சகஸ்ரநாதம், சி.டி.ராஜகாந்தம், ஏ.கருணாநிதி உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்தில் ராமநாதன் சிறுவயதில் காணாமல் போன பெரும் பண்ணையார் வீட்டு பிள்ளையாக இருந்து பின்னாளில் ரங்கன் என்ற திருடனாக மாறி இறுதியில் மீண்டும் பண்ணையாராகும் கேரக்டரில் நடித்திருந்தார்.

இதன் பின்னர் தேடிவந்த மாப்பிள்ளை, கருந்தேழ் கண்ணாயிரம், நினைவில் நின்றவள், பிள்ளையோ பிள்ளை, முத்துச்சிப்பி, பனித்திரை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

இடையில் ராமநாதனை திருமணம் செய்து கொண்டார் மனோரமா. சில மாதங்களே மனோரமாவோடு வாழ்ந்த ராமநாதன் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். தன்னுடன் நாடகங்களில் நடித்து வந்த பங்கஜம் என்பவரை மணந்து கொண்டு அவருடனேயே வாழ்க்கை நடத்தினார். கடைசி காலத்தில் வறுமையில் வாடிய ராமநாதனுக்கு மனோரமோ உதவி செய்து வந்தார். அவர் இறந்த பிறகு மனைவி என்ற ஸ்தானத்தில் இருந்து தனது மகன் பூபதியை கொண்டு இறுதி சடங்கை நடத்தினார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

கருத்துகளை எழுதுங்கள்...

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

7 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பியுள்ள ஆன் ஷீத்தல்

7 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பியுள்ள ஆன் ஷீத்தல்

மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஆன் ஷீத்தல் காளிதாஸ் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இதில் அவர் பரத் மனைவியாக நடித்திருந்தார். அதன்பிறகு ஆர்.ஜே.பாலாஜி நடித்த


ஒரு வழியாக திரைக்கு வருகிறார் இதயம் முரளி

ஒரு வழியாக திரைக்கு வருகிறார் இதயம் முரளி

சுதா கொங்கரா இயக்கதில் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தை தயாரித்தவர் ஆகாஷ் பாஸ்ரன். அவர் இயக்கி உள்ள படம் இதயம் முரளி. இதில் அதர்வா, பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி


இனிய பொன் நிலாவே பாடல் வழக்கு: இளையராஜா மறுஆய்வு மனு தள்ளுபடி

இனிய பொன் நிலாவே பாடல் வழக்கு: இளையராஜா மறுஆய்வு மனு தள்ளுபடி

பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த மூடுபனி என்ற படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார். இந்த படத்தில் இடம்பெற்ற என் இனிய பொன் நிலாவே என்ற பாடல் இன்றைக்கும் ரசிகர்களால் விரும்பி


பிளாஷ்பேக்: வில்லனை நண்பன் ஆக்கியதால் தோல்வி அடைந்த ரஜினி படம்

பிளாஷ்பேக்: வில்லனை நண்பன் ஆக்கியதால் தோல்வி அடைந்த ரஜினி படம்

ரஜினி தொடர் வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருந்தபோது தனது குரு பாலச்சந்தரின் கவிதாலயா பேனரில் நடித்த படம் சிவா. அமிதாப் பச்சன் மற்றும் வினோத் கன்னா நடித்து, 1977ம் ஆண்டு வெளியான


பிளாஷ்பேக்: டைட்டிலால் தோல்வி அடைந்த எம்ஜிஆர் படம்

பிளாஷ்பேக்: டைட்டிலால் தோல்வி அடைந்த எம்ஜிஆர் படம்

மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த சில தோல்வி படங்கள் உண்டு, படுதோல்வி அடைந்த அரிதான சில படங்களும் உண்டு. அதில் முதலிடம் வகிப்பது தாய் மகளுக்கு கட்டிய தாலி.முன்னாள் முதல்வர்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map