பிளாஷ்பேக்: எம்ஜிஆரின் நிறைவேறாத கனவு

பிளாஷ்பேக்: எம்ஜிஆரின் நிறைவேறாத கனவு
Advertisement
எழுத்து அளவு


1950ம் ஆண்டு முதல் 1954ம் ஆண்டு வரை, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய "பொன்னியின் செல்வன்" கதை, வார இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களின் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர், 5 பாகங்கள் கொண்ட புத்தகமாகவும் வெளியிடப்பட்டது. அந்தப் புத்தகத்தின் வியாபாரமும் விண்ணைத் தொட்டது. சோழ தேசத்தில் நடக்கும்படியாக எழுதப்பட்ட இந்தக் கதைக்குள் இருந்த சுவாரஸ்யத்தை உணர்ந்த எம்.ஜி.ஆர், 1958ம் ஆண்டு, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து "பொன்னியின் செல்வன்" கதையின் உரிமையைப் பெற்றார்.

அதன் பிறகு இயக்குனர் மகேந்திரனை அழைத்து அதற்கு திரைக்கதை எழுதச் சொன்னார்; அவரும் எழுதிக் கொடுத்தார். சில இயக்குநர்களை அணுகியபோது இவ்வளவு பெரிய பிரம்மாண்ட படத்தை இயக்க தயங்கினர். இறுதியில் தானே தயாரித்து இயக்குவதாக முடிவெடுத்தார். அதோடு வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் தானே நடிக்கவும் முடிவு செய்தார்.

ஜெமினி கணேசன், வைஜெயந்தி மாலா, பத்மினி, சாவித்ரி, சரோஜா தேவி, நம்பியார், எம்.என்.ராஜம், டி.எஸ். பாலையா உள்ளிட்ட பல நட்சத்திரங்களை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையமைப்பது என்றும், ஜி.கே. சாமு ஒளிப்பதிவு செய்வதென்றும் முடிவு செய்யப்பட்டது. "எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்" அளிக்கும் "பொன்னியின் செல்வன்" போஸ்டர்கூட வெளியிடப்பட்டது.

ஒருநாள், காரில் சென்றபோது, எம்.ஜி.ஆருக்கு விபத்து ஏற்பட்டது. அதிலிருந்து குணமடைய 6 மாதங்கள் ஆனது. குணமடைந்ததும் தனது படத்தில் நடிப்பதை விட பாதியில் நிற்கும் மற்றவர்களின் படத்தை நடித்து முடித்துக் கொடுக்க விரும்பினார். "மலைநாட்டு இளவரசன்", "சிரிக்கும் சிலை", "சிலம்புக் குகை", "தூங்காதே தம்பி தூங்காதே" ஆகிய 4 படங்களை நடித்துக் கொடுத்தார். இந்தப் படங்களை நடித்து முடிப்பதற்கு உள்ளாகவே மேலும் நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இதனால் அவரால் பொன்னியின் செல்வன் கதை பக்கம் செல்ல முடியவில்லை.

மீண்டும் நான்கு வருடங்களுக்குப் பிறகு மேலும் பணம் கொடுத்து கதை உரிமையை புதுப்பித்துக் கொண்டார். ஆனாலும் அவரால் பொன்னியின் செல்வன் படத்தை கடைசி வரை இயக்க முடியவில்லை. அவர் ஆசைப்பட்ட வந்திய தேவன் கேரக்டரிலும் நடிக்க முடியவில்லை.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

‛ஜனநாயகன் ரிலீஸ் : திருச்செந்தூரில் தயாரிப்பாளர் தந்த அப்டேட்

‛ஜனநாயகன் ரிலீஸ் : திருச்செந்தூரில் தயாரிப்பாளர் தந்த அப்டேட்

முதல்வர் விஜய் நடித்துள்ள கடைசி படம் ‛ஜனநாயகன். வினோத் இயக்க, பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜன., 9ம் தேதியே வெளியாக வேண்டிய படம் தணிக்கை சான்றிதழ் பிரச்னையால்


மே 28ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் கர

மே 28ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் கர

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு, கே.எஸ்.ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் கர. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இந்த படம் கடந்த


ஏஐ மூலம் ஆபாசப் படங்கள் : ருக்மிணி வசந்த் கண்டிப்பு

ஏஐ மூலம் ஆபாசப் படங்கள் : ருக்மிணி வசந்த் கண்டிப்பு

தமிழில் ஏஸ், மதராஸி படங்களில் நடித்தவர் கன்னட நடிகை ருக்மிணி வசந்த். கன்னடத்தில் டாக்சிக் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது பிரசாந்த் நீல் இயக்க, ஜுனியர் என்டிஆர்


சுந்தர்.சி, குஷ்பு 2வது மகள் அனந்திகா சுந்தரும் சினிமாவில் என்ட்ரி

சுந்தர்.சி, குஷ்பு 2வது மகள் அனந்திகா சுந்தரும் சினிமாவில் என்ட்ரி

இயக்குனர் சுந்தர்.சி சினிமாவில் 31 ஆண்டுகளாக இருக்கிறார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கிய குஷ்பு, பின்னர் ஹீரோயின் ஆகி தென்னிந்திய மொழிகளில் கலக்கினார். இப்போதும் சில


திரையுலகில் 40 வருடங்களை நிறைவு செய்த நாகார்ஜுனா

திரையுலகில் 40 வருடங்களை நிறைவு செய்த நாகார்ஜுனா

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாகார்ஜுனா. அவர் திரையுலகிற்கு வந்து இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1986ம் ஆண்டு வெளிவந்த தெலுங்குப் படமான விக்ரம் படத்தின்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map