குட் நைட் நாயகி மீதா ரகுநாதிற்கு டும் டும் டும்...
திருமணத்திற்குப் பிறகும் மீதா நடிப்பாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.
ரசிகர்கள் பலரும் மீதாவுக்கு திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்து மீதா, “எனது மொத்த இதயம்” எனப் பதிவிட்டுள்ளார்.
நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இரு வீட்டார் முன்னிலையில், நண்பர்கள், உறவினர்கள் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
ஊட்டியைச் சேர்ந்த மீதாவுக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
அவர் நடித்தது ஒரு சில படங்கள் தான் என்றாலும் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் அவருக்கு கிடைத்தது.
கடந்த வருடம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்ற குட்நைட் படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.
முதலும் நீ முடிவும் நீ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மீதா ரகுநாத்.