நான் இயக்குனரின் நாயகன்: நடிகர் வசந்த் ரவி பளிச்
தற்போதைய தமிழ் சினிமாவின் ரீச்..
கமலின் நடிப்பில் ‛விக்ரம்" ரிலீஸ்க்கு பின் தமிழ் சினிமா பெரிதாக பேசப்படுகிறது. ஓ.டி.டி., வந்ததால் அனைவரும் அனைத்து மொழி படங்களும் பார்க்கிறார்கள். அதனால் ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எப்., புஷ்பா என பிற மொழி படங்களை தமிழ் படத்தோடு ஒப்பிட்டு பேசுகிறார்கள்.
மீடியம் பட்ஜெட் படங்கள் பேசப்படுகிறதா
பட்ஜெட் படங்கள் ‛விக்ரம்"க்கு இணையாக பேசப்பட வேண்டும் என எதிர்பார்க்க கூடாது. ‛தரமணி", ‛ராக்கி" பார்த்தவர்கள் இன்றும் கொண்டாடுகிறார்கள். தரமணி பெரிய ஹிட் தான். வசூல் குறித்து தெரிவிக்காததால் பேசப்படவில்லை. வசூலை தெரிவிப்பது இன்றைய டிரண்ட் ஆகிவிட்டது.
ராம் இயக்கத்தில் ‛தரமணி"யில் நடித்தது
ராம் இயக்கத்தில் நடிப்பை துவங்கியது பெரிய விஷயம். ஒரு கதையில் நடிக்கலாமா, வேண்டாமா என முடிவெடுக்கும் அனுபவம் கிடைத்தது.
ராமின் எதார்த்தமான கதையுள்ள படங்கள்
‛கற்றது தமிழ்", ‛தங்கமீன்கள்" போல் இதுவரை படம் வரவில்லை. இந்த படங்களின் தாக்கம் எதிர் காலத்தில் வரப்போகும் எதார்த்தமான படங்களில் தெரியும்.
உங்கள் நடிப்பில் அடுத்த படங்கள்
தரமணி, ராக்கி பட கேரக்டர்களை விட வித்தியாசமான கேரக்டர்களில் 2 படங்களில் நடிக்கிறேன். ஒரு படத்தில் கொஞ்சம் காமெடியில் கலக்கியுள்ளேன். அடுத்து யாரும் எதிர்பார்க்காத அளவு ஒரு கேரக்டரில் நடிக்கிறேன்.
நீங்கள் இயக்குனருக்கான கதை நாயகனா
ஆம்... இயக்குனரின் இயக்கம், கதைக்குள் நடிக்கும் நாயகன் தான். ‛ராக்கி" இயக்குனர் அருண் மகேஸ்வரன் காட்சிகளை கூறிவிடுவர். அதை உள்வாங்கி நடித்தேன். இப்படி தான் நடிக்க வேண்டும் என கூறினாலும் நடிப்பேன்.
நடிக்க விரும்பும் கேரக்டர்கள், ரோல் மாடல்
இயக்குனர்கள் யாராவது குமரிக்கண்டம் குறித்து படம் இயக்கினால் நடிக்க விரும்புகிறேன். ஹாலிவுட்டில் வந்த ‛லாட் ஆப் ரிங்ஸ்" போல் பல பார்ட்டுகள் எடுக்கலாம். அப்பா ரவி ரோல் மாடல். அவரிடம் கடின உழைப்பை கற்றேன்.
குரல் சூப்பராக இருக்கிறதே பாடும் வாய்ப்பு
இதுவரை பாடியதில்லை. ‛எந்திரன்" பார்ட் 1 வில்லன் ஓராவின் மகனாக, பார்ட் 2வில் நடித்தவருக்கு டப்பிங் பேசியுள்ளேன். இயக்குனர் ஷங்கர் எப்படியோ என் குரலை கேட்டு பேச வைத்துவிட்டார்.
பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி
வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட
சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!
கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்
மாடர்ன் வில்லி மகாலட்சுமி
மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்
எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்
எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்
ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன்
சிலருக்கு வாய்ப்புகள் தேடி வரும், சிலருக்கு தேடலுக்கு பின் கிடைக்கும். இதில் ஜார்ஜ் விஜய் நெல்சன் முதல்ரகம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தனி டிராக்கில் நடக்க ஆரம்பித்தவரை மிமிக்ரி
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.