மாஸ் காட்டும் கடுவா : பிரியமுடன் பிரித்திவிராஜ்
ஐயப்பனும் கோஷியும், ஜனகன மன, கடுவா என வரிசையாக வெற்றிப்படங்கள் தருகிறீர்களே
என் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவது சந்தோஷம். கடுவா (புலி) புத்துணர்ச்சி தரும் படமாக அமைந்தது. சமூகத்திற்கு தேவையான, கதைகள் மலையாளத்தில் வருகிறது. இந்த நேரத்தில் இப்படி ஒரு மாஸ், படம் நடித்துள்ளேன்.
கடுவா எந்த காலகட்ட கதை
1990ல் கோட்டயம் அருகே பாலா என்ற இடத்தில் நடந்த உண்மை சம்பவம் தான் "கடுவா" கதை. படத்தோட ஸ்டைலில் ஒரு பீரியட் படம் மாதிரி நாயகனின் மீசை, மலையாளிகளுக்கே உரிய வேட்டி என எல்லாமே 1990ல் நடந்ததை கண்முன் கொண்டுவரும்.
இயக்குனர் ஷாஜி கைலாஷ் நிறைய ஹிட் தந்தவராச்சே...
2009ல் அவரிடம் பேசும் போது அவர் சினிமாவை விட்டு தள்ளி இருந்தார். நீங்க முதல்ல ஸ்கிரிப்ட் படிங்க; பின் கூறுங்கள் படம் பண்ணலாம் என கூறினேன். கதையை படித்த பின்நான் இயக்குகிறேன் என்றார். இது ஷாஜி கைலாஷின் மாஸ் படமாக வந்திருக்கு
சொந்தமாக படங்கள் தயாரிப்பது குறித்து
பிரித்திவிராஜ் புரடக்சன் சார்பில் டிரைவிங் லைசென்ஸ் படம் எடுத்தோம். பெரிய ஹிட் ஆச்சு. அந்த வெற்றிக்கு பின் "ஜனகனமன", "கடுவா", "கோல்ட்" படங்கள் எடுக்கிறோம். அடுத்து ஹிந்தி படம். படப்பிடிப்பு முடிந்துள்ளது, அக் ஷய் குமார் நடித்துள்ளர்.
அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ் உடன்
நான் ஹீரோக்களுக்கு படம் பண்ணும் இயக்குனர் இல்லை. ஒரு கதை எழுதிய பின் யாரை வைத்து ஆரம்பிக்கலாம் என முடிவு செய்வேன். கதைக்கு யார் பொருத்தமோ அவரிடம் பேசுவேன். நடிகருக்கு கதை பிடித்தால் ஓகே.
தமிழ் படங்களில் ஏன் இவ்வளவு இடைவெளி
நல்ல கதைகள் எனக்கு வரவில்லை என்பது தான் உண்மை. மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து நேரத்தை ஒதுக்கி, கதை பண்ணும் அளவுக்கு சந்தோஷப்படுத்தும் கதைகள் தேடி வருவதற்காக காத்திருக்கிறேன்.
மலையாள சினிமாவில் ஒரிஜினலான கதைகள்
நீங்கள் கேட்பது நல்ல மலையாள படங்கள் குறித்து ... மோசமான படங்கள் செய்தியில் வருவது இல்லை. சில கதைகள் ஒரிஜினலாக வரும் போது சந்தோஷம் தான். நிறைய பெரிய எழுத்தாளர்கள், படைப்பாளிகள் நடிக்கிறார்கள். சமீபத்தில் மலையாள சினிமாக்கள் அதிகம் கவனிக்கப்படுகிறது.
நேரிலும், படத்திலும் வித்தியாசமாக தெரியுகிறீர்களே
நான் அவ்வளவு மென்மையான ஆள் இல்லை. என் படங்கள் இப்படி தான் இருக்கும் என யாரும் முடிவு செய்துவிட கூடாது, ஜனகன மன, ப்ரோடாடி, கடுவா, கோல்ட் படங்களில் வித்தியாசமான கேரக்டர்கள் தான்.
பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி
வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட
சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!
கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்
மாடர்ன் வில்லி மகாலட்சுமி
மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்
எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்
எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்
ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன்
சிலருக்கு வாய்ப்புகள் தேடி வரும், சிலருக்கு தேடலுக்கு பின் கிடைக்கும். இதில் ஜார்ஜ் விஜய் நெல்சன் முதல்ரகம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தனி டிராக்கில் நடக்க ஆரம்பித்தவரை மிமிக்ரி
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.