அப்பா, அம்மாவுக்கு நாங்கள் தான் உலகம்: ஆசையுடன் அதர்வா
யுவன் பாடல்களால் உங்களுக்கு வெற்றி?
அறிமுகப் படம் "பாணா காத்தாடி" முதல் நல்ல பாடல்களை இதுவரை தருகிறார். படத்தோட டைட்டில் சாங் மிரட்டி இருந்தார். படத்தை வேற மாதிரி கொண்டு போயிருந்தார்.
இயக்குனர் ஸ்ரீ கணேஷ் கூறிய 3 கதைகள் ?
முதல் கதையை 8 நிமிட குறும்படமா எடுத்தார். அதில் துவங்கி கொஞ்சம் டெவலப் பண்ணி ஒரு கதை கொண்டு வந்தார். அடுத்து வேற கொண்டு வந்து கடைசியில் "குருதி ஆட்டம்" கதைக்கு வந்தோம்.
நீங்கள் எப்படி இவரை தேர்வு செய்தீர்கள் ?
கணேஷின் "8 தோட்டாக்கள்" பார்த்தேன். பிடிச்சிருந்துச்சு. உடனே அவர் இயக்கத்தில் நடிக்கும் ஆசை வந்தது. அப்படி அமைந்த கதை தான் "குருதி ஆட்டம். கொஞ்சம் கபடி விளையாட பழகி கபடி வீரராக நடிச்சிருக்கேன்.
படத்தில் பிரியா பவானி சங்கர் ஜோடி குறித்து ?
பழைய புடவை கொடுத்து இருக்கீங்களேனு இயக்குனரிடம் சண்டை போட்டாங்க. அவங்க டீச்சரா நடிச்சிருக்காங்க. அதற்கு ஏற்ற "லுக்"ல தான் இருந்தாங்க. நிஜத்தில் ரொம்ப சிம்பிள்.
பத்து ஆண்டுகளாக சினிமா பயணம்?
அப்பா முரளி 100 படங்களுக்கு மேல் நடித்தார். அவர் கடைசியாக நடிக்கும் போது "நம்பிக்கையா இருக்கீங்களா" என கேட்டேன். அதற்கு அவர் "ஒரு நடிகராக கற்றுக்கொண்டு வருகிறேன்" என்றார். அதே போல் நானும் இந்த 10 ஆண்டுகளில் சினிமாவை கற்று கொண்டு தான் இருக்கிறேன்.
உங்க தம்பி ஆகாஷ் நடிக்க வருவதாக செய்திகள்... ?
ஆமாம்... நடிக்க தயாராகிட்டே தான் இருக்கிறார். விரைவில் நடிகராக அறிமுகமாவார். அவர் நடிக்க வருவது சந்தோஷமாக இருக்கு. அவரவர்க்கு சினிமாவில் இடம் இருக்கு. அவர் படத்தின் அறிவிப்பு சீக்கிரமே வரும்.
அதர்வாவின் ஆசைகள் எல்லாம் என்னென்ன?
அப்பா, அம்மா கல்யாணமே ஒரு பெரிய கதை... ரெண்டு பேரும் வீட்டை விட்டு வந்து கல்யாணம் பண்ணினாங்க. நாங்கள் தான் அவங்க உலகம். அப்பா மறைவுக்கு பின் அம்மா ரொம்ப உடைந்து போயிட்டாங்க. என் அம்மாவை சந்தோசமா வைத்து கொள்ள வேண்டும் என்பது தான் என் ஆசை. அப்பா நடித்த தேசிய கீதம், வெற்றிக்கொடிகட்டு, இதயம், பொற்காலம் படங்கள் பிடிக்கும்.
பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி
வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட
சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!
கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்
மாடர்ன் வில்லி மகாலட்சுமி
மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்
எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்
எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்
ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன்
சிலருக்கு வாய்ப்புகள் தேடி வரும், சிலருக்கு தேடலுக்கு பின் கிடைக்கும். இதில் ஜார்ஜ் விஜய் நெல்சன் முதல்ரகம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தனி டிராக்கில் நடக்க ஆரம்பித்தவரை மிமிக்ரி
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.