படிப்பு எனக்கு.. நடிப்பு அப்பாவுக்கு..: அட..டா.. அட்சயா
ஹீரோயின்களாக தான் அறிமுகமாக வேண்டும் என்ற நினைப்பில் பலரும் சினிமாத்துறைக்குள் வரும் இன்றைய காலகட்டத்தில், எந்த வேடமாக இருந்தாலும் சரி அதில் தனி முத்திரை பதித்து வெற்றிக்கொடி நாட்டுவது சிலர் மட்டுமே. சிறிய, பெரிய கேரக்டர் என பாகுபாடின்றி கிடைக்கும் அனைத்தும் வாய்ப்புகளிலும் தனிபாதையை உருவாக்கி சின்னத்திரை, வெள்ளித்திரை என தடம் பதித்துள்ளவர் மதுரையை சேர்ந்த நடிகை அட்சயா. அவர் கூறுகிறார்...
நான் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே மதுரை தான். 5வது படிக்கும் போது துவங்கிய நடிப்பு பயணம் கணிதத் துறையில் எம்.எஸ்சி., முடித்தும் தொடர்ந்து வருகிறது. படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தம் இல்லையே என நீங்கள் நினைக்கலாம். படிப்பு எனக்காக.. நடிப்பு என்
அப்பாவின் ஆசைக்காக. அப்பா கார் டிரைவர். அவரும் சினிமாத்துறையில் சாதிக்க வேண்டும் என்று போராடினார்.
தோல்விகள் மட்டுமே சந்தித்ததால் அதே துறையில் என்னை ஜெயிக்க வைக்க போராடினார். அவர் எதிர்பார்த்தது போல் இன்று நான் சாதிக்க ஆரம்பித்து இருக்கிறேன். முதன் முதலில் 10 வயதில் மலையாள நடிகை ரீமா கலீங்கல்லுடன் விளம்பர படத்தில் நடித்தேன். விளம்பர படங்களை தொடர்ந்து பிளஸ் 1 படிக்கும் போது விஷாலின் மருது படத்தில் ஹீரோயின் ஸ்ரீதிவ்யாவின் தோழியாக சினிமாத்துறைக்குள் நுழைந்தேன்.
ஆர்.கே.சுரேஷின் பில்லாபாண்டி படத்தில் குணசித்திர வாய்ப்பு கிடைத்தது. தேவராட்டத்தில் குணசித்திர நடிப்பில் அசத்தினேன். விடுதலை படத்தில் ஒரு சின்ன ரோல் பண்ணினேன். இது தவிர குறும்படம், ஆல்பம், வெப் சீரியல் என கால்பதித்துள்ளேன். நான் வாலிபால் வீராங்கனை என்றால் நம்ப மாட்டீர்கள். மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றதால் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் தான் கல்லுாரி படிப்பை தொடர்ந்தேன்.
"டிவி"யில் சிவகாமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தேன். கதாநாயகி என்ற ரியாலிட்டி ஷோவில் வாய்ப்பு கிடைத்தது. இந்த ேஷா நடிப்பு போட்டிக்கானது. பைனலில் நான்கு வெற்றியாளர்களில் மூன்றாவதாக தேர்வானேன். இப்போட்டியின் நடுவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் எனது நடிப்பை பாராட்டியது வாழ்வில் மறக்க முடியாதது. நான் சினிமாவில் நடிக்க, நுாற்றுக்கும் மேற்பட்ட நடிகையர் தேர்வில் பங்கேற்று உள்ளேன். அவர்கள் முதலில் எதிர்பார்ப்பது நமது நிறம் மட்டுமே.
நான் மாநிறமாக இருப்பதால் அதிக முறை ஆரம்பத்திலேயே தோல்வியை சந்தித்துள்ளேன். அதையும் மீறி ஒரு சில இயக்குநர்கள் மட்டுமே நடிக்க சொல்லி பார்ப்பார்கள். அதிலும் தேர்வான உடனே வாய்ப்பு கிடைப்பது இல்லை. எனது முகச்சாயல் கிராமத்து கதாபாத்திரத்திற்கு மட்டுமே ஒத்துவரும் கூறிவிட்டு, அந்த கதாபாத்திரம் வந்தால் தருகிறோம் என சொல்வார்கள். இப்படி பல போராட்டங்களுக்கு பின் தான் இந்த இடம் எனக்கு கிடைத்தது.
சினிமாவில் நடித்தால் இளம் தலைமுறையினரை வசீகரிக்கலாம், பெண்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் சீரியல்களில் வெற்றி பெற வேண்டும். தற்போது சினிமா, சீரியல் என இரு குதிரைகளிலும் சவாரி செய்து வருகிறேன். எதையுமே நேசித்து
செய்தால் வெற்றி பெறலாம் என்றார்.
பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி
வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட
சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!
கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்
மாடர்ன் வில்லி மகாலட்சுமி
மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்
எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்
எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்
ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன்
சிலருக்கு வாய்ப்புகள் தேடி வரும், சிலருக்கு தேடலுக்கு பின் கிடைக்கும். இதில் ஜார்ஜ் விஜய் நெல்சன் முதல்ரகம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தனி டிராக்கில் நடக்க ஆரம்பித்தவரை மிமிக்ரி
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.