மறந்து விட்டாரா சிவகார்த்திகேயன்: கீர்த்தி சுரேஷ் பதில்
‛சாணி காகிதம்" படத்தில் செல்வராகவனுடன் நடித்தது?
அவர் ஒரு இயக்குனர் என்றாலும் நடிகராக தான் பார்த்தேன். இயக்குனர் சொல்வதை நடித்துவிட்டு சென்று விடுவார். அப்படி தான் தினம் ஷூட்டிங் நடக்கும்; ஏதுவும் பேச மாட்டார். அறிமுக நடிகர் போலவே இருப்பார். பெண் கான்ஸ்டபிள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்த படம்.
திடீரென எப்படி இவ்வளவு எடையை குறைத்தீர்கள்?
‛மகாநடி" படத்துக்கு பின் 7 மாதங்கள் வீட்டில் இருந்தபோது உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என இருந்தேன். அதற்கு பிறகு எடையை குறைத்தேன்.
அண்ணன் செல்வராகவன், தம்பி தனுஷ் உடன் நடித்த அனுபவம்?
‛சாணி காகிதம்" டிரெய்லர் பார்த்து தனுஷ் போன் பண்ணாரு. ‛செல்வராகவன் செம்மையா நடிக்கிறாரு, எனக்கு பக் பக்னு இருக்குனு" கூறினேன். ‛ஆமா நானே அவர்கிட்ட இருந்து தான் கத்துக்கிட்டேன், வேற மாதிரி நடிச்சு காட்டுவாரு"னு தனுஷ் கூறினார். ரெண்டு பேருடனும் நடித்ததில் மகிழ்ச்சி.
சிவகார்த்திகேயன் உங்கள மறந்துட்டார் போல?
ஒரு படம் மட்டும் நடிச்சிருந்தா கண்டிப்பா கேட்டிருப்பேன். அவர் கூட 3 படங்கள் நடிச்சிருக்கேன். நிறைய டைம் இருக்கு... நாங்க நடிக்க வேண்டிய கதைகள் கண்டிப்பாக வரும்போது சேர்ந்து நடிப்போம். விஜய், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, கார்த்தி கூடவும் நடிக்க வெயிட் பண்றேன். மணிரத்தினம், ராஜமவுலி, ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவும் ஆசை.
தமிழ் படங்களில் உங்களை அதிகம் பார்க்க முடியல?
மகேஷ் பாபு படத்தில் இருந்து தெலுங்கு படங்கள் நடிச்சேன், தமிழில் ‛அண்ணாத்தை"க்கு பிறகு ‛சாணி காகிதம்", அடுத்து ‛மாமன்னன்" பண்றேன். தெலுங்கு, தமிழ்னு பிரித்து பார்க்கவில்லை.
சாணி காகிதம் ஓ.டி.டி.,யில் ரிலீஸ் ஆனது குறித்து?
ஓ.டி.டி.,யில் ரிலீஸ் ஆகி உலகளவில் ரீச் ஆனதால் பலர் பார்த்து ரசித்தனர். ஆனால், தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருந்தாலும் நன்றாக தான் இருந்திருக்கும்.
கீர்த்தி சுரேஷ் பான் இந்தியா நாயகியாக மாறிடுவீங்க போல?
நீங்க வேற, தமிழ், தெலுங்கு, மலையாளம் தான் நடிச்சிருக்கேன். இன்னும் நிறைய மொழிகளில் நடிக்கணும்னு ஆசை இருக்கு. அதன் பிறகு தான் பான் இந்தியா படங்கள்.
விஜய் கூட அடுத்து எப்ப படம்?
அய்யோ விஜய் சார் கூட யார் தான் நடிக்க மாட்டேன் என்று சொல்வாங்க. நல்ல ரோலுக்காக காத்திருக்கிறேன்.
யாருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்
விஜய் சேதுபதியின் நடிப்பு ரொம்ப பிடிக்கும். ஜெயம் ரவி, கார்த்தி இப்டி ஒரு லிஸ்ட்டே இருக்கு. இவங்க கூட எல்லாம் ஒரு-ரவுண்ட் வருவேன்.
இயக்குனர்கள் லிஸ்ட் ஏதும் இருக்கா?
மணி சார், ராஜமவுலி, ஷங்கர் சார் எப்படி லிஸட் இருக்கு
கீர்த்தியின் சம்பளம் உயர்ந்திருக்கா?
அப்படி எல்லாம் இல்லை. தமிழ், தெலுங்கில் ஒரே சம்பளம் தான் வாங்குகிறேன். சமயங்களில் குறைத்துக் கொள்வேன்.
ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது?
நீண்டநாள் கழித்து ரசிகர்களிடம் பேசுவது மகிழ்ச்சி. சாணிக் காயிதம் படம் நிறைய பேருக்கு பிடிச்சிருக்கு. இந்த மாதிரி கதையில் நடித்து ரொம்ப நாளாகிவிட்டது. இன்னும் நிறைய படங்களில் நல்ல கதையில் நடிக்க விரும்புகிறேன்.
பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி
வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட
சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!
கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்
மாடர்ன் வில்லி மகாலட்சுமி
மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்
எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்
எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்
ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன்
சிலருக்கு வாய்ப்புகள் தேடி வரும், சிலருக்கு தேடலுக்கு பின் கிடைக்கும். இதில் ஜார்ஜ் விஜய் நெல்சன் முதல்ரகம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தனி டிராக்கில் நடக்க ஆரம்பித்தவரை மிமிக்ரி
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.