மிரட்டும் மிரள் : மிரட்சியில் காவ்யா
நீங்கள் என்ன படிச்சிருக்கீங்க
என் பள்ளி படிப்பு எல்லாம் திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர் தான். ஆர்கிடெக்ட் படிப்பிற்காக சென்னை வந்தேன். தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போ 5 வருஷமா நடிப்பில் இருக்கேன்.
சினிமா வாய்ப்பு எப்படி கிடைத்தது
குறும்படங்களில் நடித்தேன். அதை தொடர்ந்து "பாரதி கண்ணம்மா" சீரியலில் அறிவுமணி கதாபாத்திரத்தில் நடித்தேன். பிறகு "பாண்டியன் ஸ்டேர்ஸ்" தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தேன்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலக காரணம்
நான் எதிர்பார்த்துகொண்டிருந்தது வெள்ளித் திரை. நினைத்தபடி வாய்ப்பு கிடைத்தது. இனி சினிமாவில் மட்டும் நடிக்கலாம் என விலகி விட்டேன்.
நடித்தில் பிடித்த கதாபாத்திரம்
காவ்யாவான என்னை "அறிவுமணி"தான் இந்த உலகிற்கு தெரிய வைத்தது.
மிரள் பட வாய்ப்பு எப்படி
எப்படி என தெரியவில்லை. இப்போதும் மிரட்சியாக இருக்கிறது.
ஏதேனும் சினிமா வாய்ப்புகளை தவற விட்டீங்களா
சீரியலில் நடிக்கும் போது "பிகில்" பட வாய்ப்பு வந்தது. அப்போது வேறொரு சீரியலில் ஒப்பந்தம் ஆனதால் அதில் நடிக்க முடியவில்லை.
எந்த ஹீரோவோடு நடிக்க ஆசை
விஜயுடன் நடிக்க ஆசை. அதே போல விஜய் சேதுபதி, விஜய் தேவரகொண்டா கூடவும் நடிக்க வேண்டும்.
உங்களுடைய பொழுதுபோக்கு
பெயின்ட்டிங், இன்டீரியர் டிசைன் செய்வேன்.
பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி
வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட
சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!
கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்
மாடர்ன் வில்லி மகாலட்சுமி
மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்
எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்
எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்
ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன்
சிலருக்கு வாய்ப்புகள் தேடி வரும், சிலருக்கு தேடலுக்கு பின் கிடைக்கும். இதில் ஜார்ஜ் விஜய் நெல்சன் முதல்ரகம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தனி டிராக்கில் நடக்க ஆரம்பித்தவரை மிமிக்ரி
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.