வெற்றி என்பது நிம்மதியான துாக்கம் : அடடா அசோக் செல்வன்
அசோக் செல்வன் சினிமாவுக்கு வந்தது எப்படி
எந்த சினிமா பின்னணியும், ஐடியாவும் இல்லை. விஸ்காம் படிக்கும் போது தெருக்கூத்து பயிற்சியில் ஈடுபட்டேன். அப்போது நடிப்பில் ஆர்வம் வந்தது. குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
பிடித்த சினிமா இயக்குனர்?
"இன் தி மூட் பார் லவ்" என்ற கொரியன் படத்தை இயக்கிய வாங் கர் வை என்ற இயக்குனரை பிடிக்கும். தமிழில் மணிரத்னம், நலன் குமாரசாமி, லோகேஷ் கனகராஜ்.
கிராமத்து படங்களில் பார்க்கலாமா..
எனக்கும் ஆசைதான். நல்ல கதைக்காக காத்திருக்கிறேன்.
எதிர்கால கனவுகள்
நிறைய படங்களில் நடிக்க வேண்டும். சர்வதேச அளவில் தமிழ் படங்களை கொண்டு செல்ல வேண்டும். "சில சமயங்களில்" படத்தை போன்ற கதை களத்தை விரும்புகிறேன்.
தெகிடி மாதிரி மீண்டும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் எப்போது?
நான் நடித்து வரும் "போர்த்தொழில்" சஸ்பென்ஸ் த்ரில்லர் தான். இது வரவேற்பை பெறும் என நம்புகிறேன்.
நித்தம் ஒரு வானம்
படம் பற்றி ஸ்பெஷலான படம். கல்லுாரி மாணவன், நகரத்து இளைஞன், வெகுளித்தனமான ஊர்க்காரன் என மூன்று கதாபாத்திரங்களில் சந்தோஷமாக நடித்தேன்.
2022ல் மிகவும் பிடித்த படம்
தமிழில் மண்டேலா, ஹாலிவுட்டில் அவதார் தி வே ஆப் வாட்டர்.
நீங்கள் இயற்கை விரும்பியாமே
கொரோனா ஊரடங்கில் சொந்த ஊரான ஈரோட்டில் இருந்தேன். அன்று தான் இயற்கையின் அருமை புரிந்தது. இயற்கையான காட்சி உள்ள இடங்களுக்கு பயணித்தும், முடிந்த வரை இயற்கையோடு இணைந்தும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
வெற்றி என்பதன் வரையறை
வெற்றி என்பது நிம்மதியான துாக்கம். என் வேலைக்கு தன்னிறைவு ஆவது அவ்வளவு எளிதல்ல. இப்படி செய்திருக்கலாம். அப்படி செய்திருக்கலாம் என தோன்றும். முடிந்த வரை தன்னிறைவுடன் நடிப்பதே வெற்றி.
அடுத்தடுத்து வரும் படங்கள்
போர்தொழில், யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் காதல் படம், சபா, பா.ரஞ்சித் தயாரிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்திய படம்.
பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி
வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட
சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!
கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்
மாடர்ன் வில்லி மகாலட்சுமி
மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்
எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்
எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்
ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன்
சிலருக்கு வாய்ப்புகள் தேடி வரும், சிலருக்கு தேடலுக்கு பின் கிடைக்கும். இதில் ஜார்ஜ் விஜய் நெல்சன் முதல்ரகம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தனி டிராக்கில் நடக்க ஆரம்பித்தவரை மிமிக்ரி
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.