காதலிசம் தந்த சந்தோஷத்தில் சந்தோஷ்
முதல் படத்தில் சர்வதேச தர நடிப்பை தந்து அடுத்தடுத்த படங்களின் வாயிலாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் சந்தோஷ் நம்பிராஜன் தினமலர் வாசகர்களுக்காக பேசியதிலிருந்து... "பிறந்து வளர்ந்தது தென்காசி. அப்பா விக்ரமாதித்தன் எழுத்தாளர், கவிஞர். சென்னை பிலிம் இன்ஸ்டிடியூட் ஒளிப்பதிவுத்துறையில் சேர்ந்தேன். ஒளிப்பதிவாளர் செழியனிடம் உதவி ஒளிப்பதிவாளராக கல்லுாரி, தென்மேற்கு பருவக்காற்று, இரட்டைச்சுழி, பரதேசி படங்களில் வேலை செய்தேன். கத்துக்குட்டி, கருப்பம்பட்டி படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தேன்.
அப்போது செழியன், சர்வதேச தரத்தில் திரைப்படம் செய்வதாக கூறினார். என்னிடம் நடிக்கிறாயா என கேட்டார். என்னுடைய குருநாதர் என்பதால் நடிக்க என ஒத்துக் கொண்டேன். நடிப்பு பயிற்சி, முன் ஒத்திகை, பழைய கருப்பு வெள்ளை படங்கள் பார்த்தேன். அதில் இருந்து ஓரளவு நடிக்க கற்று கொண்டு டூலெட் படத்தில் நடித்தேன். உதவியாளர்கள் எல்லோரையும் குழந்தை போல பார்ப்பார் செழியன். நாங்கள் நிறைய கற்று கொண்டோம். புதிதாக யாராவது நடிப்பு கற்க ஐடியா கேட்டால் பழைய படங்களை பார்க்க அறிவுரை கொடுப்பேன். டெக்னாலஜி இல்லாத நேரத்தில் முழுக்க நடிப்பின் மூலமாகவும், திரைக்கதை மூலமாகவும் தான் படங்கள் நின்றன.
ஒரு விஷயத்தை உண்மையாக நேர்மையாக செய்தால் பிரதிபலன் நிச்சயம் உண்டு. டூலெட் உலக அங்கீகாரம் பெற்றது. சிறந்த மாநில மொழி திரைப்பட விருதை வென்றது. சினிமாத்துறையில் என்னை தெரிய வைத்தது. எனக்கு "கோல்கட்டா இன்டர்நேஷனல் கல்ட் பிலிம் பெஸ்டிவல்" நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருது பெற்றேன்.
மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை மையாக வைத்து உருவான வட்டார வழக்கு என்ற கதையில் கதாநாயகனாக நடித்தேன். "ஒரு பால் ஒரு சிக்ஸ்" என்பது தான் சினிமா வாழ்க்கை. தப்பி பிழைத்தல் என வரும் போது நாமாகவே பல விஷயங்களை கற்று கொள்வோம். திரையில் இன்னும் என்னை வேறு மாதிரியாக பார்க்க வேண்டும் என்பதற்காக பல கதாபாத்திரங்களை எழுதி பார்த்தேன்.
"லிவிங் டுகெதர்" எனும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் முறை சரி கிடையாது என எனக்கு பட்டது. அது குடும்ப அமைப்பை உடைக்க கூடியது. அதற்கு எதிராக படம் எடுக்க நினைத்தேன். அப்படி உருவானது தான் "காதலிசம்". நானே இயக்கினேன். ஓ.டி.டி.,யில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் ரசிகர்கள் நல்ல படங்கள், நடிகர்களை தேர்வு செய்து கவனிக்கின்றனர்.
மரபு, நவீன இலக்கியத்தில் என் தந்தை நிறைய கவிதை எழுதி உள்ளார். எனக்கு பிடித்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன். ஆனால் இலக்கியம் வேறு, திரைக்கதை வேறு. சினிமாவுக்கும் எழுதும் சூழல் வந்ததால் எழுத துவங்கி விட்டேன். உழைப்பாளர் தினம், வட்டார வழக்கு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக தயாராகி வருகின்றன.
சினிமாவை பொறுத்த வரை செயல் தான் எல்லாம். நாம் தொடர்ந்து இயங்கினால் நம் படங்கள் ஒரு நாள் மக்களை சென்றடையும். நான் முதல் தலைமுறை சினிமாக்காரன் என்பதால் தினமும் கற்று கொண்டே இருக்கிறேன் என்றார்.
பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி
வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட
சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!
கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்
மாடர்ன் வில்லி மகாலட்சுமி
மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்
எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்
எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்
ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன்
சிலருக்கு வாய்ப்புகள் தேடி வரும், சிலருக்கு தேடலுக்கு பின் கிடைக்கும். இதில் ஜார்ஜ் விஜய் நெல்சன் முதல்ரகம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தனி டிராக்கில் நடக்க ஆரம்பித்தவரை மிமிக்ரி
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.