முரண்களை கடந்த முழுமையான அன்பு இது
"ஆலமர நிழலில் இளைப்பாறும் போது அண்ணாந்து பார்த்தால் இலைகள் வெளிச்சத்தை மறைத்து ஒளியானது கீற்றாக தான் தெரியும். சிறுவயதில் இருந்தே தாயுடன் முரண்பாடு செய்தே வளர்ந்தவள் நான். ஒவ்வொரு முரணிலும் என் விருப்பத்தை புரிந்து கொண்டு வெளியுலகில் என்னை வெளிச்சமிட வைத்த என் தாயின் அன்பை புரிந்து கொண்ட தருணங்கள் அற்புதமானது,"" என்கிறார் டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுமயா கவுசர்.
செல்ல மகளாய் சிந்தை குளிரவைத்த தாயைப் பற்றி அவர் கூறியது: நான் பிறந்து வளர்ந்தது சென்னையில் தான். இப்படித்தான் வாழ வேண்டும்; வளரவேண்டும் என அம்மா சுரையா ஜபின் கட்டுப்பாடுகளை சொல்லிக் கொண்டே இருப்பார். ஏன் இப்படி இருக்க வேண்டும் என கேள்வி கேட்பேன். "பதில் தெரியாது, ஆனால் மீறக்கூடாது" என்பார். அம்மா சொல்லும் ஒவ்வொரு கட்டுப்பாட்டுக்கும் காரணம் கேட்டு கேட்டு எனக்கும் அம்மாவுக்கும் ஏகப்பட்ட முரண்கள் இருந்தன. இரண்டு அக்காவையும் வெளியூரில் படிக்க வைத்த அம்மாவிடம் நான் சென்னையில் இன்ஜினியரிங் படிக்கிறேன் என்ற போது ஏற்கவில்லை. கடைசியில் எனக்காக விட்டுக் கொடுத்தார்.
சென்னையில் எனக்கு பிடித்த பி.டெக் ஐ.டி., படிக்க அனுமதி தந்தார். கல்லுாரி இறுதியாண்டில் வெளியூர்களில் வேலை கிடைத்தது. ஆனால் செல்ல அனுமதி கிடைக்கவில்லை. டிவி நிகழ்ச்சி ஆடிஷனுக்கு செல்ல விரும்பினேன். என் விருப்பத்தை மதித்த அம்மா என்னுடன் ஆடிஷனுக்கு வந்தார். தேர்வான பின் சூட்டிங்கிலும் கலந்து கொண்டார். பின் எந்த தடையும் சொல்லவில்லை.
அம்மா பியூட்டிசியன் என்பதால் 2 மாதங்களுக்கு ஒருமுறை அவரே "பேசியல், ப்ளீச்சிங்" செய்து விடுவார். டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக, தயாரிப்பாளராக இருந்தாலும் அரசு, தனியார் நிகழ்ச்சிகளில் நெறியாளராக வெளியில் செல்வதுண்டு. எவ்வளவு வேலை இருந்தாலும் அம்மா என்னுடன் துணையாக வருவார்.
வாழ்க்கைக்கான நல்ல துணையையும் ஏற்படுத்தி கொடுத்தார். தற்போது கணவர், மாமியார் உற்சாகப்படுத்துவதால் பொதுவெளியில் என்னால் சாதிக்க முடிகிறது. அதற்கான அடித்தளம் அம்மா என்னிடம் காட்டிய முரண் தான் என்றார்.
பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி
வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட
சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!
கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்
மாடர்ன் வில்லி மகாலட்சுமி
மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்
எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்
எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்
ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன்
சிலருக்கு வாய்ப்புகள் தேடி வரும், சிலருக்கு தேடலுக்கு பின் கிடைக்கும். இதில் ஜார்ஜ் விஜய் நெல்சன் முதல்ரகம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தனி டிராக்கில் நடக்க ஆரம்பித்தவரை மிமிக்ரி
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.