மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்புகிறார்கள்: விமர்சிப்பவர்கள் குறித்து சமுத்திரகனி கருத்து
சமுத்திரகனி தற்போது மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் தென்காசி பகுதியில் நடந்து வருகிறது. இதற்கிடையில் அவர் தனியார் ஓட்டல் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியார்களிடம் பேசியதாவது: மலையாள படப்பிடிப்புக்காக வந்திருக்கிறேன். மலையாள படத்தில் நடித்து நிறைய நாட்கள் ஆகிவிட்டதால் நடிக்கிறேன். இதில் நான் மட்டுமே தெரிந்த முகம் மற்றவர்கள் புதியவர்கள். படத்தின் இயக்குனரின் தந்தை ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி. அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை படமாக எடுக்கிறார்.
தொடர்ந்து படம் நடிப்பதால் இயக்குவதை கைவிடவில்லை. ஆண்டுக்கு ஒரு படம் கட்டாயம் இயக்குவேன். "விநோதயசித்தம்" படத்திற்கு பிறகு தெலுங்கு படம் இயக்கினேன். அடுத்து தமிழ் படம் இயக்க இருக்கிறேன். வருகிற ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும். அது குறித்தான பணிகள் நடைபெற்று வருகிறது.
திரையுலகில் ஒருவருக்கொருவர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்பவர்கள் மனநோயாளிகள். அது மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்புவது மாதிரி. இதுபோன்ற ஆட்கள் எப்போதும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அவர்களை கடந்து செல்ல வேண்டும். தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருவது குறைந்து வருவது உண்மைதான். குறிப்பாக கிராமப்புறங்களில் சினிமாவின் முதல் காட்சிக்கான வரவேற்பு குறைந்துள்ளது. இது மனதிற்கு கஷ்டமாக உள்ளது. ஆனால் தமிழ் சினிமாவை கொண்டாடும் ரசிகர்கள் இருக்கும் வரை தமிழ் சினிமா வளர்ந்து கொண்டே இருக்கும், என்றார்.
திருச்சி கிழக்கு வேட்பாளரா? ராஜ்யசபா எம்.பி.,யா?: நடிகர் சஞ்சீவ் பதில்
தமிழக முதல்வர் விஜயின் நண்பரும் ‛மெட்டிஒலி, திருமதி செல்வம் போன்ற சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமானவருமான நடிகர் சஞ்சீவ் சென்னையில் அளித்த பேட்டியில், ‛‛எனக்கும் முதல்வர்
திரிஷ்யம் 3 : மோகன்லால் நெகிழ்ச்சி
ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் திரிஷ்யம் 3 படம் வெளியாகி உள்ளது. முதல் இரண்டு பாகங்கள் அளவுக்கு இந்தபடம் இல்லை என்ற விமர்சனம் பொதுவாக எழுந்துள்ளது. அதேசமயம் படத்திற்கு வரவேற்பும்
‛கேஜிஎப்-3, சலார்-2 எப்போது? -பிரசாந்த் நீல் வெளியிட்ட தகவல்
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கிய பிரசாந்த் நீல் அதையடுத்து பிரபாஸ் நடிப்பில் ‛சலார் என்ற படத்தை இயக்கியவர், தற்போது ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ‛டிராகன் படத்தை
தயாரிப்பாளராகும் இயக்குனர் மாரி செல்வராஜ்!
‛பரியேறும் பெருமாள் என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், அதன்பிறகு ‛கர்ணன், மாமன்னன், வாழை, பைசன் என அடுத்தடுத்து பல படங்களை இயக்கினார். இந்நிலையில் கர்ணன் படத்தை
ஜூன் 12ல் நெட்பிளிக்ஸ் வெளியாகும் சூர்யாவின் கருப்பு!
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து திரைக்கு வந்துள்ள படம் ‛கருப்பு. அடுத்தடுத்து சூர்யா நடித்த படங்கள் தோல்வியை தழுவி வந்த நிலையில் இந்த படம் அவருக்கு சூப்பர் ஹிட்டாக
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.